ட்விட்டர் கையேடு – எளிய தமிழில்

ட்விட்டர் கையேடு – எளிய தமிழில்

twitter

அன்பான தமிழ் கீச்சர்களே,

நமது தளம் http://twitamils.com  முழுக்க முழுக்க தமிழ் ட்விட்டருக்கானதே. தமிழ் மக்கள் அனைவருக்கும் தங்களுக்கென ஒரு குரல்,ஊடகமாக ட்விட்டர் அமைய வேண்டுமென்பதே நம் நோக்கம். ட்விட்டர் நமக்கான, கட்டற்ற சுதந்திரமான ஊடகம். நம் கருத்துகளை நம் தாய்மொழியிலேயே வெளிப்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் கணினியிலும் மற்றும் அலைபேசியிலும் தமிழில் எழுதும் வழிகள் அனைத்தையும் தொகுத்து எழுதி இருந்தோம். நமது நட்பை வலுப்படுத்தும் நோக்கிலான முதல் வருடாந்திர சந்திப்பில் புதியவர்களுக்கு ட்விட்டரை எளிமையாக விளக்கி கூறும் வகையில் ஒரு கையேட்டினை வெளியிட்டோம். இணையம் அறிந்த தமிழர் அனைவரும் ட்விட்டர் பற்றி அறிந்து பயன்படுத்திட வேண்டும். நமக்குள் நல்ல விடயங்களில் ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டிட வேண்டும். உங்களுக்கென ஒரு ஊடகம் வேண்டும்.

கீழுள்ள இணைப்பிலிருந்து கையேட்டினை பதிவிறக்கி கொள்ளலாம்.

Download – தமிழ் கீச்சர்கள் : ட்விட்டர் கையேடு

இதனை தரவிறக்கவும், அச்சிடவும், பகிரவும் எவ்வித தடையுமில்லை! வெளியீடு : TwiTamils.com என்பது மட்டும் தெரிவித்தால் போதுமானது!

கையேட்டினைக் குறித்த உங்களின் விமர்சனங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம். உங்களது கருத்துகள் இதை மேலும் மேம்படுத்த உதவும். புதியவர்களுக்கு இதை பகிர்ந்து உதவுங்கள்.

 

ஆக்கம் : @karaiyaan karaiyaan@gmail.com

சமர்ப்பணம் -> @thamiziniyan @tamil @expertsathya

வெளியீடு : @twitamils

முகவரி : TwiTamils.com/TTguide

புதிதாக கற்றுத்தர வேண்டியவர்கள் தினமும் வந்து கொண்டே இருக்கிறார்கள். நமக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லிக் கொடுப்போம். டிவிட்டரில் உங்கள் நண்பர்கள் புதிதாக இணையும் போது அவர்களுக்கு இதைப் பரிந்துரையுங்கள்.

 

படம் – http://www.flickr.com/photos/vvmanoj/1456722766/

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *