1 புதிய குருவி

SignUp : Twitter.com முகவரி கொடுத்தவுடன் “‘New To Twitter? SignUp!” என்ற முகப்பு பக்கம் இருக்கும். பெரும்பாலும் அனைவரிடமும் மின்னஞ்சல் முகவரி இருக்குமென்று நம்புகிறேன். இல்லையெனில் புதிய மின்னஞ்சல் முகவரி ஒன்றை துவங்கி கொள்ளுங்கள். அது போதும் புதிய ட்விட்டர் கணக்கு உருவாக்குவதற்கு.

 

மாதிரி படத்திலுள்ளபடி முதலில் உங்களது (Name) பெயரைக் கொடுங்கள். இரண்டாவதாக (Email) மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும். மூன்றாவதாக (Password) கடவுச்சொல் கொடுங்கள். கடவுச்சொல் எண்கள், எழுத்துகள் உடன் குறைந்தது எட்டுக்கு மேல் இருக்கட்டும். இறுதியாக இருப்பது (UserName) பயனர் பெயர். இது தான் முக்கியமான ஒன்று. உங்கள் பெயரை ஆங்கிலத்தில் கொடுத்தால் அதற்கேற்ப சில பயனர் பெயர்களை ட்விட்டரே பரிந்துரைக்கும், அதில் ஒன்றாகவோ அல்லது உங்களது விருப்பத் தேர்வாகவோ பயனர் பெயர் இருக்கலாம், தமிழிலும் கொடுக்கலாம். இரண்டு முதல் பதினைந்து எழுத்துகளில் பயனர் பெயர் இருக்கலாம். அவற்றில் ஆங்கில எழுத்துகள், எண்கள், _ இடம் பெறலாம். முடிந்த அளவு மிக எளிதாக, நினைவில் கொள்ளும்படி சுருக்கமாக அமையுங்கள். ஏனெனில் உங்களது கீச்சுகளை பிறர் பகிரும் போது 140 எழுத்துகளில் உங்களது பயனர் பெயரும் சேர்ந்தே அடக்கம், அதனால் உங்கள் கீச்சுகளை பிறர் பகிர முடியாமல் போகலாம். இனி உங்களுக்கான ட்விட்டர் முகவரி twitter.com/UserName எனவும், கீச்சுகளில் @UserName எனவும் நீங்கள் கொடுக்கும் UserName உடன் சுட்டப்படுவீர்கள். நீங்கள் கொடுத்த தகவல்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். ( இறுதியாக ‘ReCaptcha Verification’ காட்டப்படலாம். கொடுக்கப்படும் படத்தில் காட்டியுள்ள எழுத்துகளை அதிலுள்ளபடி சரியாக தட்டச்சி) Create My Account பொத்தானை அழுத்துக.

 

கணக்கை துவங்கிய பின், உங்களது கணக்கை உறுதி செய்யக் கோரி ஒரு மின்னஞ்சல் (Verification Email) உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பபடும். அதிலுள்ள கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை திறவுங்கள். இப்போது உங்கள் ட்விட்டர் கணக்கு உங்களுடையதே என உறுதி செய்யப்பட்டிருக்கும்.

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *