9 மேலதிகமாக

மேலதிகமாக :

 

Follow Back : நம்மை பின்பற்றுபவரை நாம் திரும்ப பின்பற்றுவது FollowBack. இது கட்டாயமல்ல. கவனிக்க, நீங்கள் பின்பற்றுவோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப உங்கள் காலக்கோட்டில் கீச்சுகளின் எண்ணிக்கை அதிகமாகும். நீங்கள் 2000 பேரால் பின்பற்றப் பட்டால் மட்டுமே உங்களால் 2000 பேருக்கு மேல் பின்பற்ற முடியும் என ட்விட்டர் நிர்ணயித்துள்ளது.

 

Fail Whale : ட்விட்டர் தளமானது அதிக கீச்சுகளால் திணறும் நேரம் அல்லது ட்விட்டர் தளம் பராமரிப்பு நேரத்தில் ஏற்படலாம். உதாரணமாக, புது வருடம் அன்று எல்லோரும் ஒரே நேரத்தில் கீச்சுகளை அனுப்பும் போது திணறி விடும். அந்த நேரத்தில் பெரிய திமிங்கலம் ஒன்றை குருவிகள் சுமக்க முடியாமல் திணறுவது போல் காட்டும். தளத்தை நன்கு மேம்படுத்தி விட்டதால் இப்போதெல்லாம் அதை அதிகம் காண முடிவது இல்லை.

 

Oauth :

ட்விட்டர் அதன் API இடைமுகப்பை வெளியிட்டதும் ட்விட்டரை பயன்படுத்துவதற்கான இணைய தளங்கள், மென்செயலிகள் உருவாகின. இன்று லட்சக்கணக்கில் உள்ளன. போலியான இணைய தளங்கள் பயனரின் விவரங்களைத் திருட ஆரம்பித்ததும் ட்விட்டர் அதற்கு மாற்று வழியாக Oauthentication தனிக் கொண்டு வந்தது. அதாவது, ஒரு உலாவியில் நீங்கள் ட்விட்டர் தளத்தில் Signin ஆகி உள்ளீர்கள் என்றால், அதே உலாவியில் ஒரு ட்விட்டர் செயலியை பயன்படுத்த மறுபடி மறுபடி ட்விட்டர் விவரங்களைக் கொடுக்க தேவை இல்லை. செயலிகளில் SignIn With Twitter என உள்நுழைந்தால் உலாவியில் எந்த ட்விட்டர் கணக்கு திறந்துள்ளதோ அதை பயன்படுத்த எடுத்துக் கொள்ளும். ஒருவேளை நீங்கள் ட்விட்டர் கணக்கை திறந்து இருக்காவிடின், செயலி உங்களை ட்விட்டரின் signIn பக்கத்திற்கு திருப்பி விடும். இதன் மூலம் ட்விட்டர் தளத்தில் மட்டுமே உங்கள் பயனர்பெயர்,கடவுச்சொல்லைக் கொடுக்கிறீர்கள் என்பது உறுதியாகிறது. உலாவியின் Address Bar ல் twitter.com என இருந்தால் மட்டுமே ட்விட்டர் பயனர்பெயர்,கடவுச்சொல் விவரங்களைக் கொடுக்க வேண்டும். அதன் பின் நாம் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். செயலிகளால் நம் கணக்கை பயன்படுத்திக் கொள்ள முடியுமே அன்றி கணக்கு விவரங்களைக் காண இயலாது.

 

 

JustUnfollow : நீங்கள் ஒருவரைப் பின்பற்றி அவர் உங்களைப் பின்பற்றாமல் இருக்கலாம் (Non-Followers). உங்களை ஒருவர் பின்பற்றி நீங்கள் அவரைப் பின்பற்றாமல் இருக்கலாம் (Fans). அவர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளலாம். JustUnfollow.com

 

Follwrs : உங்களை யாரேனும் Unfollow செய்தால் உடனடியாக உங்கள் கணக்கில் அது ட்வீட் செய்யப்படும். யார் யார் உங்களை Unfollow செய்துள்ளார்கள் என அறிந்து கொள்ளலாம்.

 

TwitterFeed : http://twitterfeed.com/ உங்களது இணைய தளத்தை / வலைப்பூவை TwitterFeed தளத்தின் மூலமாக உங்களது ட்விட்டர் கணக்குடன் இணைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் ஒரு பதிவை வெளியிடும் போது அது உடனடியாக ட்வீட் செய்யப்பட்டு விடும்.

 

தமிழ் கீச்சுகள் :

தமிழில் கீச்சு எழுதுவது மிகவும் சுலபம். அலைபேசியில் தமிழ் எழுதும் வழியை j.mp/MobileTamil இங்கே விரிவாக விளக்கியுள்ளோம். கணினியில் தமிழ் எழுதும் அனைத்து வழிகளையும் இங்கே j.mp/WriteTamil விளக்கியுள்ளோம். தமிழ் எழுதுவதில் வேறு ஏதேனும் சிரமம் இருப்பினும் எங்களுக்கு @twitamils என தொடர்பு கொள்ளலாம். தமிழ் கீச்சர்கள் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளோம்.

 

விண்ணப்பம் : இந்த கையேட்டினை பகிரவும், அச்சிடவும் எவ்வித தடையும் இல்லை. வெளியீடு TwiTamils.com என்பது மட்டும் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் மேம்படுத்த உங்களது ஆலோசனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். ட்விட்டர் வழி தொடர்புக்கு @TwiTamils

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *