4 மற்ற அமைப்புகள்

Design :

ட்விட்டர் பல்வேறு BackGround படங்களை வழங்குகிறது, Tile என்பது பின்புல படம் திரும்ப திரும்ப வரும். http://www.colourlovers.com/themeleon/twitter Theme Leon மூலமும் மேலும் சில படங்களை ட்விட்டரே வழங்குகிறது. அல்லது Upload Image – ஏதேனும் ஒரு படத்தை உங்கள் கணினியில் இருந்து எடுத்து பின்புல படமாக வைத்துக் கொள்ளலாம். Background – கீச்சுகளின் பின்புல நிறம், எழுத்துகள் கருப்பு நிறத்தில் இருக்கும், Links – சுட்டிகளின் நிறம். நிறங்களின் Hex மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. Save Changes என்பதை சொடுக்குங்கள். பக்கத்தை Refresh செய்யும் போது உங்களின் பின்புல படம் மாற்றப்பட்டிருக்கும்.

 

Password :

உங்களின் கடவுச்சொல்லை மாற்றுவதற்கான பகுதி இது. கடவுச்சொல் எப்போதும் எட்டு எழுத்துக்கு குறையாமல் எண்கள், எழுத்துகள், குறியீடுகள் உடன் அமையுங்கள். கடவுச்சொல்லை மாற்றுவதற்கு முதலில் பழைய கடவுச்சொல்லை கொடுத்து, இரண்டாம் கட்டத்தில் புதியதை கொடுத்து, மூன்றாவதில் புதிய கடவுச்சொல்லை மீண்டும் கொடுத்து உறுதி செய்க. இப்போது Save Changes தனை அழுத்துக.

 

Notifications :

 

ட்விட்டர் இணைய தளத்தில் இருந்து நீங்கள் பெரும் மின்னஞ்சல்கள் பகுதி இது. Messages – 1. எவரேனும் உங்களுக்கு தனிச் செய்திகள் அனுப்பினால், அல்லது 2. பதில்கள் அனுப்பினால் அவை உங்கள் மின்னஞ்சலுக்கும் வரும்படி செய்து கொள்ளலாம். Activity – 1. புதிதாக யாராவது உங்களை பின்பற்றினால், 2.உங்களது கீச்சை யாரேனும் விருப்பத் தேர்வில் சேர்த்தால், 3.உங்களது கீச்சை யாரேனும் மீள்கீச்சு செய்தால், உங்களுக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கும்படி செய்து கொள்ளலாம். Updates – ட்விட்டரின் புதிய வசதிகள் மின்னஞ்சலில் பெறலாம்.

 

Apps : ட்விட்டர் அதன் API இடைமுகப்பை வெளியிட்டதும் ட்விட்டரை பயன்படுத்துவதற்கான இணைய தளங்கள், மென்செயலிகள் உருவாகின. Twitter.com தளத்தில் மட்டுமே ட்விட்டரை பயன்படுத்த முடியும் என்று இல்லை. இன்று லட்சக்கணக்கில் ட்விட்டர் செயலிகள் உள்ளன. போலியான இணைய தளங்கள் பயனரின் விவரங்களைத் திருட ஆரம்பித்ததும் ட்விட்டர் அதற்கு மாற்று வழியாக Oauthentication தனிக் கொண்டு வந்தது. அதாவது, ஒரு உலவியில் நீங்கள் ட்விட்டர் தளத்தில் Signin ஆகி உள்ளீர்கள் என்றால், அதே உலவியில் ஒரு ட்விட்டர் செயலியை, இணைய தளத்தை பயன்படுத்த மறுபடி மறுபடி ட்விட்டர் விவரங்களைக் கொடுக்க தேவை இல்லை. செயலிகளில் SignIn With Twitter என உள்நுழைந்தால் உலவியில் எந்த ட்விட்டர் கணக்கு திறந்துள்ளதோ அதை பயன்படுத்த எடுத்துக் கொள்ளும். ஒரு வேலை நீங்கள் ட்விட்டர் கணக்கை திறந்து இருக்காவிடின், செயலி உங்களை த்விட்டரின் signIn பக்கத்திற்கு திருப்பி விடும். இதன் மூலம் ட்விட்டர் தளத்தில் மட்டுமே உங்கள் பயனர்பெயர்,கடவுள் சொல்லைக் கொடுக்கிறீர்கள் என்பது உறுதியாகிறது. உலவியின் Address Bar ல் twitter.com என இருந்தால் மட்டுமே ட்விட்டர் பயனர்பெயர்,கடவுச்சொல் விவரங்களைக் கொடுக்க வேண்டும். அதன் பின் நாம் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். செயலிகளால் நம் கணக்கை பயன்படுத்திக் கொள்ள முடியுமே அன்றி கணக்கு விவரங்களைக் காண இயலாது.

 

இது போல் நீங்கள் பயன்படுத்திய செயலிகளின் விவரம் Applications பகுதியில் இருக்கும். அந்த இணைய தளங்கள் இனி பயன்படுத்த விருப்பம் இல்லையெனில் Revoke Access என்பதை அழுத்தி அதற்கான அனுமதியை நீக்கி விடலாம். பக்கத்தை மறுபடி Reload செய்க.

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *