13 புதிய கீச்சர்களை தேடும் வழிகள்

ட்விட்டர் சக்திவாய்ந்த ஒரு சமூக ஊடகமாக பரிணமித்துள்ளது. ட்விட்டர் தளம் உரையாடல்களை அனுமதிக்கிறது. ஆனால் யாருடனாவது உரையாட நீங்கள் அவரை பின்தொடர (Follow) வேண்டியுள்ளது. நீங்கள் யாரையும் பின்தொடராத பட்சத்தில் உங்கள் காலக்கோடு (TimeLine) வெறுமையாகத்தான் இருக்கும். ஒருமுறை நீங்கள் சிலரை தொடர்வீர்களேயானால் ட்விட்டர் என்பது உங்களுக்கு மிகப் பிடித்ததாகவும், உபயோகமானதாகவும் மாறிவிடும். உங்கள் கருத்துக்களைப் பகிரவும், கேள்விகள் கேட்கவும், இசை, செய்திகள் போன்ற பல விஷயங்களுக்கான Real time Update களைப் பெறவும் முடியும். ஆனால், சிறந்த ட்வீப்ஸ் (ட்விட்டர் உபயோகிக்கும் மக்கள்)’ஐ கண்டுபிடிப்பது என்பது புதிதாய் ட்விட்டர் உபயோகிக்க தொடங்கியவர்களுக்கு கொஞ்சம் சிரமமானதாகத்தான் இருக்கும். ஆனால் இது தீர்வு இல்லாத ஒரு விஷயம் அல்ல.

 

ட்வீப்ஸ்’ஐ கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளேன். இவை உபயோகமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

 

Twitter People Search : ட்விட்டர் வலைத்தளம் வழங்கும் “Built In” வசதி. இதன் மூலம் நீங்கள் தேடும் ஒருவரை எளிதில் கண்டு பிடிக்க முடியும். இது ட்விட்டர் ஹேண்டில் பெயர் மட்டுமல்லாமல் “Bio” வில் இருக்கும் அவரின் நிஜப்பெயரையும் சேர்த்து தேடுகிறது, நிஜப்பெயரை நிச்சயம் பகிரவேண்டும் என்று ட்விட்டர் எந்த ஒரு நிபந்தனையையும் விதிக்காததால் உங்கள் தேடுதல் கொஞ்சம் சிரமமாகிறது. இருந்தாலும் உங்கள் முதல் தேடுதலைத் தொடங்க இது ஒரு நல்ல இடமே. நம்முடைய விருப்பங்களின் அடிப்படையில் வகைபடுத்தப்பட்ட தேடல் அல்லது த்விட்டரின் மேம்படுத்தப்பட்ட தேடல் உதவலாம்.

 

Tweepz : இடம், வேலை போன்ற தனிப்பட்ட விஷயங்களை ட்விட்டர் சேகரிக்காததால் எந்த ஒரு ட்வீப்ஸ் தேடுதல் தளமும் துல்லியமான தேடுதல் முடிவுகளை தருவதில்லை. இருந்தாலும் இந்த தளத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட விஷயங்களின் அடிப்படையில் நம் தேடுதலை செய்யமுடியும் (உதா. பெயர், இடம், Bio…). தேடல் முடிவுகளை இடம், தொடர்வோர் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்திக்கொள்ள முடியும். இதை போன்றதொரு தளம் TweepSearch.

 

TwitDir : இதுவும் மற்றொரு தேடுதளம். இதன் மூலம் ஒவ்வொரு category பிரிவிலும் முன்னணியில் இருக்கும் நபர்களை தேட முடியும்..

 

Twibs : வர்த்தக நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளின் தொகுப்பாக இந்த தளம் உள்ளது. இதனால் நேரடியாக நீங்களே அவற்றின் வாடிக்கையாளர் சேவை பகுதியை தொடர்பு கொள்ள இயலும்.

 

Twellow : இந்த தளத்தின் மூலம் உங்களை போலுள்ள ட்வீப்ஸ்’ஐ கண்டறிய முடியும். இத்தளம் ஒரு டைரக்டரி’யாக செயல்படுகிறது. 6 மில்லியன் ட்வீப்ஸ் இத்தளத்தில் பதிந்துள்ளனர். குறிப்பிட்ட ப்ரோஃபைல் முதல் அனைத்து விதமான தேடல்களையும் இத்தளத்தின் உதவியுடன் செய்ய முடியும். உதா. நீங்கள் கணினித்துறை நண்பர்களை தேடுகிறீர்களே’யானால் அந்த வகையறா (Category)வில் தேடும் வசதி இத்தளத்தில் உள்ளது.

 

WeFollow : இத்தளம் HashTag களின் அடிப்படையில் செயல்படுகிறது. இதுவும் ஒரு டைரக்டரி போன்றே செயல்படுகிறது. உபயோகிப்பாளர்கள் (ட்வீப்ஸ்) அவர்களின் தகவல்களை இத்தளத்தில் பதிந்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் மூன்று #Hashtag கில் தன்னை இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலம், அதே #hashtag கில் இருக்கும் உங்களை போன்ற ட்வீப்ஸ்’ஐ எளிதில் அடையாளம் கண்டு அவர்களை தொடரலாம்

 

Just Tweet It : இதுவும் ஒரு “User Created” டைரக்டரியாக செயல்படுகிறது. நமக்கு தேவைப்படும் ஆட்களை அந்தந்த வகையறா(Category)வில் தேடி அவர்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் நம்மையும் எந்த வகையறாவிலும் இணைத்துக்கொள்ளலாம். Twellow & WeFollow ஐ போல சிறப்பாக ஒழுங்கு படுத்தப் பட்டது இல்லை என்றாலும் பொதுவான தேடல்களுக்கு இது நல்ல தளம்.

 

இவை மட்டுமல்லாது த்வீப் களை நாம் பின்பற்றுவோரின் நண்பர்களின் நண்பர்களில் தேடி, குறிச்சொற்கள் மூலம் தேடி பரிந்துரை செய்யும் சில தளங்கள் உள்ளன.
1. Who To Follow
2. Twubble
3. Twitterel
4. who should i follow
5. Mr.Tweet
6. Twitter Adder
7. Monitter
8. Twubble

 

சமீபகாலமாக ட்விட்டரை உபயோகிக்கும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. மற்ற சமூக வலைத்தளங்களைப் போலில்லாமல் ட்விட்டர் பல வகைகளில் உபயோகமானதாக உள்ளதால் பல புதியவர்கள் தங்களை ட்விட்டரில் இணைத்து வருகின்றனர். கஸ்டமர் சர்வீஸ் முதல் வேலை தேடுவது வரை பல அசாதாரண உபயோகங்களுக்கும் ட்விட்டர் பயன்படுகிறது. நம் ஊரில் நம் அருகில் இருக்கும் மக்களுடன் நல்ல தொடர்பிலிருக்கவும் ட்விட்டர் உதவுகிறது. நாம் எங்கிருந்தாலும் நம் ஊரில் நடக்கும் செய்திகள், அரசியல் இன்னும் பல விஷயங்களை இதன் மூலம் அறியலாம். உதாரணமாக நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் ஒருவரால் உங்களுக்கு சென்னையில் இருக்கும் ஒரு சிறந்த உணவகத்திற்க்கான வழியைக் கூற இயலாது. இதற்கு சென்னையில் வசிக்கும் ஒருவரின் உதவி உங்களுக்கு தேவைப்படுகிறது. உங்கள் அருகாமையில் இருக்கும் ட்வீப்ஸ்’ஐ கண்டறிவதற்கான சில வழிகளை இங்கு காணலாம்.

 

Twitter Search : அருகாமை ட்விட்டேர்களை தேட இருக்கும் வழிகளுள் ஒன்று, ட்விட்டர் தேடல். ட்விட்டர் தேடலின் “Advanced Search” இல் உள்ள “Near this place” ஆப்ஷனின் மூலம் நமது இந்தத் தேடல் எளிதாகிறது. ட்விட்டர் தேடலில் உங்களின் நகரத்தின் பெயரை கொடுத்து தேடுவதன் மூலம் ட்விட்டரின் “Real time stream” இல் அந்த நகரம் தேடப்பட்டு தேடலின் முடிவுகள் உங்களுக்கு கொடுக்கப்படும். தேடல் முடிவுகள் ட்வீப்ஸ்’களின் Bio வில் இருக்கும் நகரத்தின் அடிப்படையிலும், ஒருவேளை அவர்கள் போனிலிருந்து ட்வீட்’டும் பட்சத்தில் அவர்களின் இடத்தினையும் சார்ந்திருக்கும்.

 

Twellowhood : Twellow தளத்தில் வழங்கப்படும் ஒரு டைரக்டரி வசதியாகும். Twellow என்பது ட்விட்டரின் Yellow Pages போல் ஒரு டைரக்டரியாக செயல்படுகிறது. இதன் மூலம் ஒரு பெயரையோ, தலைப்பையோ தேட முடியும். TwellowHood என்பது Twellow டைரக்டரியின் ஒரு இடம் சார்ந்த தேடலுக்கு வழிவகை செய்கிறது. இதன் மூலம் உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ட்விட்டர் உபயோகிப்பாளர்களைத் தேட முடியும். உபயோகிப்பதற்கு எளிதான இத்தளத்தில், தோன்றும் வரைபடத்தில் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கிப் பார்ப்பதன் மூலம் அந்த இடம் சார்ந்த ட்விட்’டுகளையும் ட்விட்டர்’களையும் அடையாளம் காண முடியும். மேலும் அவர்களின் சமீபத்திய ட்வீட்டுகளை பார்த்து அவர்களை நீங்கள் தொடரவும் இத்தளம் வழிவகை செய்கிறது.

 

Local Tweeps : ஹேஷ் டேக்’கின் உதவியோடு ட்வீப்ஸ்’ஐ ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாகும். ஒவ்வொரு ட்விட்டரும் இத்தளத்தில் தங்களின் பின்கோட்’ஐ இணைத்துக்கொண்டு, பிறகு நம் இருப்பிடம் சம்மந்தப்பட்ட ட்வீட்டுகளில் #lt என்னும் ஹேஷ் டேக்’கை இணைக்க வேண்டும். இத்தளம் இத்தகைய ட்வீட்டுகளை கண்டறிந்து அவற்றை இடம் வாரியாக வகைப்படுத்தி அத்தளத்தில் அவ்விடத்திற்கான பகுதியில், அந்த ட்வீட்’களை தொகுக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட இடத்தை சார்ந்த ட்வீப்ஸ்’ஐ எளிதில் அடையாளம் காண முடியும்.

 

TwitterLocal : Adobe AIR (it will run on Windows, Mac, and Linux) ஆகும். ஒரு குறிப்பிட்ட இடம் சார்ந்த ட்வீட்’டுகளை கண்டறிந்து இத்தளம் தொகுக்கிறது. ட்விட்டரின் Real-time Stream லிருந்து ட்விட்டர் தேடலின் அடிப்படையில் ஒரு இடத்தை தேடி, அதற்கான ட்வீட்’களை தொகுக்கிறது. நீங்கள் உங்கள் இடத்தை இதில் பகிர்வீர்களேயானால், இத்தளம் உங்கள் இடம் சார்ந்த, அருகாமைலிருந்து செய்யப்படும் ட்வீட்ஸ்’ஐ உங்கள் பார்வைக்கு எடுத்து வருகிறது. இதன்மூலம், உங்களை போலுள்ள, உங்கள் அருகாமை ட்வீப்ஸ்’ஐ கண்டறிந்து அவர்களை உங்களால் தொடர முடியும்.

 

Nearby Tweets : ட்விட்டர் தேடலின் ஒரு மேம்படுத்தப்பட்ட வசதியாகும். இத்தளம் உங்களின் இடத்தை அதுவாகவே கண்டறிந்து, உங்களுக்கு அருகாமையிலிருக்கும் ட்வீட்ஸ்’களையும், ட்வீப்ஸ்’களையும் தொகுக்கிறது. இத்தளத்தில், உங்களால் இடம், இடத்தை சுற்றி தேடவேண்டிய சுற்றளவு, தேடவேண்டிய முக்கிய வார்த்தைகள் போன்றவற்றை மாற்றிக்கொண்டு உங்கள் தேடலை மேம்படுத்த முடியும்,. இதன் மூலமும் உங்கள் அருகாமை ட்வீப்ஸ்’ஐ நீங்கள் தொடர முடியும். இதைப் போன்று மற்றதொரு தளம் Chirp City

 

TwitterHolic : உங்கள் உள்ளூர்/அருகாமை டாப்-ட்விட்டர்களை அறிந்துகொள்ள முடியும். உங்களின் TwitterHolic பக்கத்திற்கு சென்றால் உங்கள் அருகாமையில்/உள்ளூரில் உங்களின் ரேங்க் தெரிவிக்கப்படும். அதனருகில் இருக்கும் இடத்திற்கான சுட்டியை க்ளிக்கி உங்கள் அருகாமையில் இருந்து ட்வீட்டும் டாப்-ட்வீப்ஸ்’ஐ கண்டறிய முடியும்.

 

Local Follow : இத்தளத்தின் மூலம் location, bio, name, keyword அடிப்படையில் த்வீப் களை தேட முடியும்.

 

City Tweets : உலகின் பல்வேறு நகரங்களை சேர்ந்த த்வீப் களை தேடி தொகுத்து உள்ளார்கள். கிட்டத்தட்ட 52 நகரங்கள் அகர வரிசை படுத்தப்பட்டுள்ளன. உங்களது நகரத்தையும் இணைத்து கொள்ள வேண்டுகோள் விடுக்கலாம்.

 

Tweet Up என்பது ட்விட்டர் மூலம் கிடைத்த நண்பர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் போடுவதாகும். இதன் மூலம் புதிய நட்புகள் வளரவும், நமது நட்பை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லவும் முடியும். அதற்கான சில வழிகள் இங்கே.

 

Twtvite : அழைப்பு சார் ட்விட்டர் சேவை ஆகும். இதிலிருக்கும் பல ட்வீட்-அப் களின் அடிப்படையில் உங்கள் நகரத்திலும் ஒரு ட்வீட்-அப் ஐ நிகழ்த்திட முடியும். இத்தளம் நீங்கள் அழைப்பு விடுத்த நபர்களுக்கு நினைவூட்டல் ட்வீட் அனுப்பி விடும்.

 

Meetup : இத்தளத்தில் ட்வீட்-அப்’பிற்கென்றே தனி பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகரிலும் நடக்கும் ட்வீட்-அப்’கள் இதில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இதில் பதிந்து கொள்வதன் மூலம் நமக்கும் ட்வீட்-அப்கள் குறித்த அப்டேட்கள் கிடைக்கப் பெறலாம்.

 

ஐ-போனிற்க்கான ட்விட்டர் அப்ளிகேசன்’கள் பலவற்றிலும் அருகாமையிலுள்ள ட்விட்டர்களையும், ட்விட்டுகளையும் கண்டறியும் வசதி செய்யப்பட்டுள்ளது. எல்லா அப்ளிகேசனும் செயல்படும் விதம் ஒன்றே. உங்களுடைய இடத்தை(Geo Location) கண்டறிந்து அதனடிப்படையில் தேடுதலை செய்கிறது. இடம் சார்ந்த தேடல்களை செய்ய வல்ல இலவச ட்விட்டர் அப்ளிகேசன்கள் சில : Twinkle மற்றும் TwitterFon

 

மேற்கண்ட தளங்கள் தமிழகத்து த்வீப் களை தேட உதவுமா என்பது ஐயமே! ஆதலால் தமிழ் த்வீப் களுக்கென தனியாக ஒரு டைரக்டரி எழுதிக் கொண்டுள்ளோம். விரைவில் எதிர்பார்க்கலாம்.

இப்பதிவை எழுதியவர் @vedhalam

 

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *