17 புதியவர்களை/புதியவர்களுக்கு பரிந்துரைக்க

ட்விட்டரில் யாரை பின்பற்றுவது(Follow) என்பதை தீர்மானம் செய்வது ரொம்ப சிக்கலானது. முதலில் நமக்கு பிடித்த ஒருவரை ஃபாலோ செய்ய வேண்டும். பின்னர் அவர் யாரை ஃபாலோ செய்கிறாரோ அல்லது, அவரை யார் ஃபாலோ செய்கிறார்களோ, அவர்களில் நமக்கு பிடித்தவர்களை தேடிப்பிடித்து ஃபாலோ செய்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். வெளிநாட்டு ஆங்கில ட்விட்டர்கள் இந்த வேலைக்கு சுலபமான ஒரு வழி வைத்திருக்கின்றனர். என்னவென்றால் #followfriday என்ற HashTag பட்டியைப் பயன்படுத்துகிறார்கள்.

 

Hash Tag என்றால் என்ன?

ஹேஷ்டேக் #HashTag என்பது, எதாவது முக்கியமான குறிச்சொல் முன்னர் # என்று போடுவது. உதாரணமாக #ilaiyaraja இளையராஜா பற்றி யாரேனும் எதாவது ட்வீட்டுகின்றனர் என்றால் இந்த #ilaiyaraja ஹேஷ்டேகை அவர்களின் ட்வீட்டில் சேர்க்க வேண்டும். #ilaiyaraja என்கிற ஹேஷ்டேக் ட்வீட்டில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

 

ஹேஷ்டேகை யாரேனும் க்ளிக்கினாலோ, அல்லது தேடினாலோ, அந்த குறிப்பிட்ட ஹேஷ்டேக் உள்ள அனைத்து ட்வீட்டுகளையும் பார்க்க முடியும். ஆகையால், #ilaiyaraja என்ற ஹேஷ்டேகை க்ளிக்கும் போது இளையராஜா பற்றிய அனைத்து ட்வீட்டுகளையும் படிக்க முடியும்.

 

மிகவும் அதிகம் விவாதிக்கப்படும், பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக், ட்விட்டர் பக்கத்தில் trend listல் வரும். உதாரணமாக, சில வாரங்களுக்கு முன் நடந்த மும்பை குண்டுவெடிப்பின் போது #mumbaiblast என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டில் இருந்தது. இந்த ஹேஷ்டேகை படித்தவர்கள் உடனுக்குடன் மும்பை குண்டுவெடிப்பு பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

சரி, #followfriday எப்படி உருவானது? எப்படி வேலை செய்கிறது?
16 ஜனவரி 2009ல் @Micah Baldwin என்பவர் “Iam starting Follow Fridays. Every Friday, suggest a person to follow, and everyone follow him/her” என்று ட்வீட்டினார். அதற்கு அவர் நண்பர்  Mykl Roventine என்பவர் “@micah Great idea! You need a hashtag for that – #followfriday”. இது உடனடியாக தீப் போல் பற்றிக் கொண்டது. யார் யார் அவர்களுக்குத் தெரிந்த நல்ல ட்வீட்டர்களை பிறருக்கு அறிமுகப்படுத்த, இந்த #followfriday ஹேஷ்டேகை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.      முதலில் வெள்ளிக்கிழமை மற்ற சக ட்வீட்டர்களை அறிமுகப்படுத்த என்று ஆரம்பித்து பின்னர், என்றைக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடியதாகி விட்டது. #followfriday மருவி #FF எனவும் ஆனது. ஆக, புதிதாக ஆங்கிலத்தில் ட்விட்டர்களைத் தேட விரும்புவோர் #followfriday அல்லது #FF என்று தேடினாலோ, இல்லை அந்த ஹேஷ்டேகுகளை கிளிக்கினாலோ போதும், பிறர் அறிமுகப்படுத்தும் பல ட்விட்டர்களை சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியும்.
#followfriday பயன்படுத்துவோர் வெறும் ட்விட்டர் பெயர்களை மட்டும் சொல்வதில்லை, அவர்களைப் பற்றி சிறு குறிப்பையும் சேர்க்கின்றனர். “#followfriday @techcrunch @cnet” என்று மொட்டையாக கூறாமல், “To know latest tech updates follow : @techcrunch @cnet #followfriday”, என்று ட்வீட்டுகின்றனர். இதனால் #followfriday ஹேஷ்டேக் ட்விட்டர் உலகில் மிகவும் பிரபலமான ஹேஷ்டேகாகக் கருதப்படுகின்றது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இதனை ட்விட்டர் World Trending Topics ல் காணலாம். சரி தமிழ் கீச்சர்களுக்கு நாம் என்ன #HashTag செய்யலாம். ஆரம்ப காலத்தில் தமிழ் கீச்சர்களும் ஆங்கில கீச்சர்களின் பட்டிகளையே பயன்படுத்தி வந்தோம். தோழர் @TBCD (@TPKD_) அறிமுகப்படுத்திய #TNfisherman tag க்குப் பின் தமிழ் கீச்சுகளுக்கு தனி பட்டிகள் பயன்படுத்தும் எண்ணம் பரவலானது. #TNmusic , #TNeco , #TNmovies , #TNae11 என தமிழில், தமிழ் கீச்சர்களுக்காக த்வீட்டப் படுவதில் #TN முன் ஒற்று பட்டிகளில் சேர்த்துக் கொண்டோம்.
தற்போதைய தமிழ் கீச்சுலகம் மிக அதிகம் பேரை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு வாரமும் புதிய கீச்சர்களை மற்றவர்க்கு அறிமுகம் செய்யவும், அனுபவ கீச்சர்களை புதியவர்களுக்குப் பரிந்துரைக்கவும் நாமும் ஒவ்வொரு வெள்ளியன்றும் பட்டி மூலம் பரிந்துரைக்கலாம். வெள்ளிக் கிழமை தான் அடுத்து வரும் இரண்டு விடுமுறை நாள்களை கணக்கில் கொண்டு உற்சாகமாக த்வீட்டுவோம், வெள்ளிக்கிழமை தான் மிக அதிக த்வீட்கள் பகிரப்படும் நாள். எனவே அன்று #TNFF அல்லது #TNfollow என்ற பட்டியைப் பயன்படுத்தலாம். #TNfollow என்பது விளக்கமாகவும், சுருக்கமாகவும் இருக்கும்.
பதிவு : @kuumuttai

 

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *