2 நுழைவாயில்

Recommendations : https://twitter.com/#!/welcome/recommendations ட்விட்டர் சில பிரபலங்களின் உறுதி செய்யப்பட ட்விட்டர் கணக்குகளைக் காட்டும். பிரபலங்கள் பெயரில் போலிகள் அதிகம் இருப்பதால், இந்த பரிந்துரை முழுவதும் ட்விட்டரால் “Verified” செய்யப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

 

Interests – Browse Categories https://twitter.com/#!/welcome/interests or https://twitter.com/#!/who_to_follow/interests பல்வேறு தலைப்புகளில் முக்கியமான சிறந்த கீச்சர்கள், வல்லுனர்கள் பட்டியலிடப்பட்டிருப்பார்கள். நம் துறைசார் ஆர்வத்தின் அடிப்படையில் தேடிக் கொள்ளலாம்.

 

Find Friendshttps://twitter.com/#!/welcome/import or https://twitter.com/#!/who_to_follow/import – இங்கே முதலாவது கட்டத்தில் நீங்கள் தேடுபவரின் பெயரைக் கொடுத்து தேடலாம். அடுத்ததாக உங்கள் Gmail, Yahoo, Hotmail, AOL மின்னஞ்சல்களின் பயனர் பெயர், கடவுச்சொல்லைக் கொடுத்து, உங்களுடன் மின்னஞ்சல் வழி தொடர்பு கொண்டுள்ள நண்பர்கள் எவரும் ட்விட்டரில் உளரா என தெரிந்து கொள்ளலாம். இது போல் நீங்கள் கண்டுபிடிக்கப்பட Account Settings ல் ‘Let Others Find Me by my email Address’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். கொடுத்த விவரங்களை ட்விட்டரின் சேமிப்பிலிருந்து அழித்துக் கொள்ளலாம்.

மின்னஞ்சலின் கடவுச்சொல்லை ட்விட்டருக்கு தருவதில் விருப்பமில்லையெனில், உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளைக் கொடுத்து ட்விட்டரில் இணைய வேண்டுகோள் விடுக்கலாம்.

 

Who To Follow : https://twitter.com/#!/who_to_follow/suggestions இங்கே நீங்கள் பின்பற்றுவதற்கு ட்விட்டரே சிலரை பரிந்துரைக்கும். பரிந்துரை நீங்கள் பின்பற்றும் நண்பர்களின் நண்பர்களாகவோ, உங்கள் துறைசார் ஆர்வத்தின் அடிப்படையிலோ, சில நேரம் அர்த்தமற்றதாகவோ கூட இருக்கும். கணக்கு ஆரம்பித்த உடன் யாரையேனும் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. Skip This Step என்பதை அழுத்துவதன் மூலம் அடுத்த படிக்கு நகரலாம். பின்தொடர்தல் என்பது..

 

Follow : பின்தொடர்தல் மூலம் ஒருவரின் கீச்சுகளை நீங்கள் உங்கள் காலக்கோட்டில் (TimeLine) வாசிக்க முடியும். ஒவ்வொருவரின் ட்விட்டர் பக்கத்திலும் Follow பொத்தான் தரப்பட்டிருக்கும். அதை அழுத்துவதின் மூலம் நீங்கள் அவரது கீச்சுகளை வாசிக்கப் பெறுகிறீர்கள். இனி அவர் கீச்சு ஒன்றைப் பகிரும் போது உடனுக்குடன் அதை உங்கள் காலக்கோட்டில் காண முடியும். ‘Real Time’ இது தான் ட்விட்டரின் சிறப்பு. அதே போல உங்களைப் பின்பற்றுபவர் உங்களது கீச்சுகளை அவரின் காலக்கோட்டில் காண்பார். ட்விட்டரில் பெரும்பாலும் முகம் அறியாதவர்களாக இருக்கும் போது Follow செய்வது ஒன்றே பழகுவதற்கு வழி. ஒருவேளை அவரது கீச்சுகளை வாசிப்பதில் விருப்பமில்லை என்றால் மறுபடியும் அவரது பக்கத்திற்கு சென்று Unfollow பொத்தானை அழுத்தி விலகிடலாம். காலக்கோட்டில் அவர் கீச்சுகளைக் காணப்பெற மாட்டீர்கள். ட்விட்டர் எளிமையானது.

 

முகப்பு அமைப்பு :

பின்பற்றுவதற்கு சிலரைப் பரிந்துரைத்த பின் ட்விட்டர், உங்களது முகப்பு பக்கத்தை வடிவமைக்க கோரும்.

இங்கே உங்கள் புகைப்படம் பதிவேற்றி, உங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்பையும் தரலாம். அல்லது Skip This Step அழுத்தி தாவுங்கள். விரிவாகப் பார்ப்போம்.

 

ஒருவரைப் பின்பற்றும் முன் அவரது ட்விட்டர் பக்கத்திற்கு சென்று அவரின் Profile தனை பார்க்கிறோம். அவர் யார் என்னவென தெரிந்து கொள்கிறோம் இல்லையா. அது போலத்தான் பிறர் நம்மை பின்பற்ற நமது Profile தனை வேண்டிய தகவல்களோடு அமைக்க வேண்டும். கீச்சு எழுதும் முன், யாரையேனும் பின்பற்றும் முன், யாரேனும் உங்களை பின்பற்றும் முன் இதை செய்து முடித்திடுவது நன்று.

 

Profile Settings பயனர் அமைப்பு : https://twitter.com/settings/profile இணைப்பை திறவுங்கள். உங்கள் ட்விட்டர் Profile மூலம் உங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை தரலாம். Picture – பொருத்தமான முகப்பு படத்தை உங்கள் கணினியில் இருந்து தேர்வு செய்யுங்கள். படம் 700kb அளவிற்குள் இருக்க வேண்டும். சதுர வடிவிலான படமாக இருப்பது நலம். படமானது உங்கள் கீச்சுக்கு ஒரு முக மதிப்பை அளிக்கிறது.

 

Name – உங்கள் பெயரைக் கொடுங்கள். பயனர் பெயர், கடவுச் சொல் தவிர மற்ற எங்கிலும் தமிழ் பயன்படுத்தலாம்.

 

Location – நீங்கள் இருக்குமிடம். WebSite – உங்களின் வலைப்பூ அல்லது இணையதள முகவரி. Bio – உங்களைப் பற்றிய சுருக்கமான சுயவிவரக் குறிப்பு 160 எழுத்துகளில். Post To FaceBook – உங்களது கீச்சுகளை FaceBook லும் பகிர்ந்திட இயலும். இதை சுட்டும் போது கீழே உங்களின் முகப்புத்தக முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும். யாரெல்லாம் உங்கள் கீச்சுகளைப் பார்க்கலாம் என்பதில் Public என்று தேர்வு செய்யப்பட்டிருக்கும். தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுங்கள். My facebook page என்பதை தேர்வு செய்து Allow செய்யுங்கள். இனி உங்கள் கீச்சுகள் மட்டும் உங்களது ட்விட்டர் பெயருடன் உங்களின் FaceBook சுவரில் எழுதப்படும். ஆனால் ட்விட்டரில் நீங்கள் பிறருக்கு எழுதும் பதில்கள், பிறரின் கீச்சை மீள்கீச்சு செய்தால் அவை முகப்புத்தகத்தில் பகிரப்படாது. Save Changes கொடுத்து முடித்து விடுங்கள்.

 

Account Settings கணக்கு அமைப்பு :

ட்விட்டர் தளத்தில் நுழைந்ததும் மேலே வலது பக்க மூலையில் படத்திலுள்ளபடி அழுத்துங்கள். ஐந்தாவதாக இருக்கும் Settings தனை தேர்வு செய்க, அல்லது http://twitter.com/settings/account என்ற இணைப்பை திறந்து கொள்ளுங்கள்.

 

இங்கே நீங்கள் முன்னர் கொடுத்த user name, email விவரங்களை தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம். Email க்கு கீழே இருக்கும் ‘Let Others Find Me by my email Address’ வசதியானது உங்கள் நண்பர்கள் ட்விட்டரில் இணையும் போது மின்னஞ்சல் மூலமாக உங்களை அடையாளம் காண ஏதுவாகிறது. Find Friends பகுதியில் இதை விரிவாக காணலாம்.

 

Language ஆனது English ஆகவே இருக்கட்டும். ட்விட்டர் தற்போது பதினாறு மொழிகளில் இருக்கிறது. மேலும் பல மொழிகளில் @translator மொழிபெயர்த்து வருகிறார்கள். அவர்களின் அனுமதி பெற்றதும் விரைவில் தமிழ் மொழிபெயர்ப்பையும் நாம் துவங்கலாம்.

TimeZone ஆனது நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து தேர்வு செய்யப்பட்டிருக்கும். இது எப்படி வேலை செய்கிறது என Trends பகுதியில் பார்க்கலாம்.

Tweet Location இதை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் கீச்சுகளை அனுப்பும் போது இருக்கும் இடத்தின் Satellite Geo Location னும் கீச்சுடன் சேர்த்து பகிரப்படும். ஜப்பான் பேரிடர் சமயங்களில் இந்த வசதி பலரது உயிர் காக்க பேருதவியாக இருந்தது. ஏதேனும் ஒருவர் ஆபத்தில் இருந்தாலோ, உதவி கோரினாலோ இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

தனிப்பட்ட தகவல்களை தர விரும்பாதவர்கள் இதனை தேர்வு செய்ய வேண்டாம். பழைய ட்விட்டர் பயனர்கள் Delete All Location Information மூலம் இதற்கு முன்னர் பகிர்ந்த Geo Location விவரங்களை மொத்தமாக அழித்து விடலாம்.

Tweet Media இந்த பகுதியை தேர்வு செய்ய வேண்டாம். Tweet Privacy உங்களது கீச்சுகளை நீங்கள் அனுமதியளித்தவர் தவிர பிறர் காண இயலாது செய்கிறது. இதை தேர்வு செய்திருந்தால், ஒருவர் உங்களை பின்பற்ற Follow பொத்தானை அழுத்தும் போது அந்த தகவல் உங்கள் அனுமதிக்காக உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். நீங்கள் விரும்பினால் மட்டும் அவர் Follow செய்வதை (Accept) அனுமதிக்கலாம். அல்லது அதை (Reject) மறுதலிக்கலாம். மேலும் உங்கள் கீச்சுகளை யாரும் Twitter ReTweet செய்ய இயலாது. HTTPS Only என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதனால் நமது தகவல்கள் பாதுகாப்பாக Encrypt செய்யப்பட்டு பகிரப்படும். Country நீங்கள் இருக்கும் நாட்டை தேர்வு செய்திடுங்கள். இறுதியாக Save Changes தனை சுட்டுங்கள். உங்களது கடவு சொல்லை தட்டச்சி உறுதி செய்ய வேண்டும். அதற்கு கீழுள்ள Deactivate My account உங்களது ட்விட்டர் கணக்கை அழிப்பதற்க்கானது. அது பற்றி நமது தளத்தில் விரிவாக விளக்கியுள்ளோம்.

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *