22 ட்விட்டர் என்ற ஆலமரம்

(மதுரை ட்விட்டர் சந்திப்பில் @chinnapiyan அவர்களால் உருவாக்கப்பட்ட வாழ்த்துமடலின் எழுத்துவடிவம்.)

 

எத்தனை பறவைகள் உன்னிடம் தஞ்சம்
அத்தனைக்கும் அளிக்கிறாய் மஞ்சம்

இலக்கியம் பேசும் பறவைகள் என்ன
கவிதைகள் பாடும் பறவைகள் என்ன

உள்நாட்டு பறவைகள் என்ன வெளிநாட்டு பறவைகள் என்ன
பல்நோக்குடன் வரும் பல் டாக்டர் பறவை என்ன

உற்றவர்க்கு உள்ளன்போடு உதவிடும் பறவைகள் என்ன
மற்றவர்க்கு அறுவையானாலும் வந்து போகும் பறவைகள் என்ன

அப்பப்பா எண்ணிலடங்கா பறவைகளின் ரகம்
எப்பவுமே கேட்டு கொண்டிருக்குமே ஆனந்த ராகம்

சிறு கதைகளாகட்டும் சிங்கார கருத்துக்களாகட்டும்
அறுசுவையுடன் பரிமாறபடுகிறது உன்னிடத்திலே

கோபதாபங்களை கொட்டும் பறவைகள் எத்தனை
உள்ள குமுறல்களை கொட்டி தீர்ப்பவைகள் எத்தனை

சமுதாயத்தின் கொடுமைகளை சாடும் பறவைகளுக்கு
அமுதமாய் தீர்பளிக்கிறாய் உண்மூலம் மக்களுக்கு

நகைச்சுவை கேலி கிண்டல் நையாண்டி என
வகை வகையாக சிரிக்க முடிகிறது உன்னிடம்

துக்கம் சோகம் என்று அழமுடிகிறது உன்னிடத்தில்
தூக்கம் மறந்து ஆறுதல் அளிக்கிறாய் என்னிடத்தில்

ஒரு கிளையில் காதல் கொஞ்சும் பறவைகள்
மறு கிளையில் காதலுக்கு ஏங்கும் பறவைகள்

இங்ஙணம் வித விதமான பறவைகள் இருந்தாலும்
அங்ஙனமே சகித்து கொள்கிறாய் அனைத்தையும்

ஆபத்து என்றால் அரசாங்கத்தை விட முந்துகிறாய் நீ
விபத்து என்றால் துடித்தும் போகிறாய் நீ

அறுவை சிகிச்சைக்கு உயிர் காக்க உடனடி இரத்தம்
மறுசொல் இல்லாமல் உதவும் உன்னிடம் என்றும் இல்லை வருத்தம்

காக்கும் கடவுளுக்கு உண்டு ஓர் தலவிருச்சம்
எக்காலத்திலும் நீயே எங்களுக்கு அபயமளிக்கும் மாவிருச்சம்

குண்டுசியிலிருந்து கோபுர கலசம்வரை கிடைப்பது எங்கே
குறைவில்லாமல் கூறப்படுகிறது உன் மரக்கிளைகளில் இங்கே

பிரியாணி முதல் பீசா வரை இங்கே ஒரு பாசம்
பிரியமுடனே கூப்பிட்டு அழைக்கும் நேசம்

சமயத்தில் சிறுசு பெருசு என்றில்லாமல் ஒரு நக்கல்
சமய பேதமில்லாமல் நடந்திடுமே ஒரு கலக்கல்

அன்றாடம் எதிர்படும் பிரச்சனைகளின் தீர்வுக்கு
மன்றாடும் மாமன்றம் உன் மரநிழல்

பகைவர்களையும் நேசிக்க வைக்க முடிகிறது உன்னால்
அனைவரையும் அணைத்து கொள்ள முடிகிறது உன்னால்

உன் கிளைகளில் முட்டை இட இயலாதது
பெண் பறவைகள் வரத்து குறைவானது

இந்த கூடல் மாநகரில் கூடி இருக்கும் பறவைகளுக்கு
அந்த எல்லாம் வல்ல இறைவன் வாரி வழங்குவான் அருளை

தனக்கு என்றில்லாமல் இந்த உலகுக்கே நீ சொந்தம்
உனக்கு வித்திட்டவரை வணங்குகிறோம்

சின்னபையன்

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *