10 ட்விட்டரில் நிழற்படங்களை பகிர்ந்திடும் வழிகள்

இப்போது ட்விட்டரிலேயே படங்களை இணைக்கும் வசதி வந்துவிட்டது. இக்கட்டுரை இந்த வசதி கொண்டுவரப்படுவதற்கு முன்பு எழுதியது.
ட்வீட்டர் (Twitter) இன்றைய இணைய உலகில் பிரபலமாகி விட்ட சமூக வலைத்தளம்., நிமிடத்துக்கு நிமிடம், இருக்கின்ற இடத்திலிருந்தே, உங்கள் நண்பர்களுக்கு நிகழ்கால உங்களின் உலகை காட்டிக் கொண்டே இருக்கலாம். நிகழ்காலத்தை காட்டுவது வார்த்தைகளாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை. புகைப்படங்களாகவும் இருக்கலாமே. Smart Phones அலைபேசிகள் வழி ட்வீட்ட தொடங்கி விட்டோம். அதில் எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது எப்படி? இதோ சில எளிய வழிமுறைகள்…
ட்விட்டர் பக்கத்தில் நேரிடையாக புகைப்படங்களை இணைக்க வழியில்லாவிட்டாலும், பல்வேறு இணையதளங்கள் இந்த வசதிகளை உங்களுக்கு அளிக்கின்றன. ஒவ்வொரு நாளும், புதிய புதிய இணையதளங்கள், புகைப்படங்களை பகிர்வதெற்க்கென்றே உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன., கீழ்க்கண்ட சில வலைத்தளங்களில், மிக எளிதாக உங்கள் புகைப்படங்களை வலையேற்றிவிடலாம்.
TwitPic : பல்வேறு பிரபலங்கள் உட்பட அதிகமான ட்வீட்டர் பயனாளர்களை கொண்டுள்ள இந்த வலைத்தளம், அமெரிக்காவில் ஹட்சன் ஆற்றில் விமானம் விழுந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒருவர் பகிர்ந்ததால் மிகவும் புகழ்பெற்றது. உங்கள் ட்வீட்டர் ஐடியை வைத்து உள் நுழைந்து, உங்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வலையேற்றிவிடலாம். முதல்முறையாக, உங்கள் ட்வீட்டர் பயனர் கணக்கை (User Account) வைத்து உள்நுழையும்போது, அதை அங்கீகாரம் (Authorize) செய்ய சொல்லி ட்வீட்டர் கேட்கும். அங்கீகரித்து உள்நுழைந்து, Upload என்ற பொத்தானை அழுத்தினால், உங்கள் படங்களை கணினியில் இருந்து வலையேற்றுவதற்க்கான ”Browse” பொத்தானையும், கீழே அந்த புகைப்படம் சம்பந்தமான கருத்துக்களை சொல்வதற்க்கான பெட்டியை காணலாம். நிமிடங்களில் வலையேற்றி, ட்வீட்டரிலும் பகிர்ந்துகொள்ள ”Post To Twitter Account” என்பதை தெரிவு செய்தால் போதுமானது.
YFrog : மிகவும் புகழ்பெற்ற ImageShack நிறுவனத்தினரால் நடத்தப்படும் இந்த தளமும், மிகவும் எளிமையான வழிமுறைகளை கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்ட படி, உங்கள் ட்வீட்டர் பயனர் கணக்கை கொண்டு உள் நுழையுங்கள், புகைப்படத்தை வலையேற்றம் செய்யுங்கள், ட்வீட்டரில் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
TweetPhoto : Plixi என URL-ல் இயங்கி வந்த இந்த தளம், தற்போது Lockerz என்ற URL-ல் இயங்குகிறது Seesmic போன்ற புகழ்பெற்ற ட்வீட்டர் ஒருங்கிணைப்பு தளங்களால் பயன்படுத்தப்படும் இந்த தளம், FaceBook மற்றும் ட்வீட்டரில் ஒரே நேரத்தில் படங்களை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.

 

Pikchur : பல்வேறு இயங்கு தளங்களில் சிறப்பாக செயல்படும் இந்த தளம், FaceBook, Twitter, FriendFeed, Tumbler மற்றும் Flickr போன்ற சமூகவலைத்தளங்களில், உங்கள் புகைபடங்களை ஒருங்கிணைந்து பகிர பயபடுகிறது. தனியாக பயனர் கணக்கு தொடங்கியோ அல்லது, ட்வீட்டர் / பேஸ்புக் ஆகியவற்றின் பயனர் கணக்குகளை கொண்டோ உள் நுழைந்து, படங்களை வலையேற்றலாம்.

TwitGoo : பல்வேறு ட்வீட்டர் பயன்பாட்டுதளங்கள் அல்லது ட்வீட்டர் நிரலிகளால் (Third Party Tools) பயன்படுத்தப்படும் இந்த தளம், Mac மற்றும் BlackBerry இயங்குதளங்களிலும் சிறப்பாக செயல்படக்கூடியது.
பிற வலைத்தளங்களின் மூலமாக ட்வீட்டரில் புகைப்படங்கள் பகிர்வதைப் பார்த்தோம். நிமிடங்களில், மின்னஞ்சல் மூலமாகவும், உங்கள் கைபேசியில் எடுத்த புகைப்படங்களை குறுஞ்செய்தி மூலமாகவும் கூட ட்வீட்டரில் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கும் பல வழிகள் உள்ளன.
TwitXR : உங்கள் கைபேசியிலிருந்தே, அதில் உள்ள புகைப்படங்களை வலையேற்ற உதவும் இத்தளம், பல்லாயிரம் ட்வீட்டர் பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. ட்வீட்டர் மட்டுமல்லாது, ஃபேஸ்புக், ப்ளாக், ஃபிளிக்கர் ஆகியவற்றிலும் இதன் மூலம் படங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், விண்டோஸ் கைபேசிகள், நோக்கியா மற்றும் மோட்டோரோலா வகை கைபேசிகள் சிறப்பாக செயல்படக்கூடியது. உங்கள் கைபேசியின் உலாவியில் m.twitxr.com என்ற வலைப்பக்கம் சென்று உங்கள் பயனர் கணக்கு மூலம் புகைப்படங்களை வலையேற்றலாம். உங்களுக்கென்று தனியாக ஒரு பயனர் கணக்கு உருவாக்கினால், உங்களுக்கான மின்னஞ்சல் முகவரியை இந்த தளம் வழங்கும். அந்த மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் புகைப்படங்களை இணைத்து, மின்னஞ்சல் Body பகுதியில், புகைப்படம் சம்பந்தமான உங்கள் கருத்துக்களை 140 எழுத்துக்களில் குறிப்பிட்டு, மின்னஞ்சல் அனுப்பினால் போதும் உங்கள் புகைப்படம் ட்வீட்டரில் பகிரப்படும்.
TwitPic : மேலே பார்த்த இந்த வலைத்தளம், உங்களுக்கென்று தனியாக ஒரு மின்னஞ்சல் முகவரியை வழங்கும். அதாவது, உங்கள் ட்வீட்டர்பயனர்கணக்கு.XXXX@twitpic.com என்று இருக்கும். இந்த மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் படங்களை இணைத்து, Subject பகுதியில் 140 எழுத்துகளில் உங்கள் கருத்துக்களை குறிப்பிட்டு, மின்னஞ்சல் அனுப்பினால், உங்கள் ட்வீட்டர் பக்கத்தில், புகைப்படம் பகிரப்படும்
MobyPicture : மிகவும் இலகுவான, அதே சமயம் குறைந்த பாதுகாப்பு கொண்ட இந்த முறையில், உங்கள் புகைப்படங்களை ட்வீட்டரில் பகிர்ந்து கொள்ளலாம். ட்வீட்டர் பயனர்கணக்கு.பயனர்குறிச்சொல்@mobypicture.com (TwitterUserName.TwitterPassword@mobypicture.com) என்பதற்க்கு மின்னஞ்சல் அனுப்பினால், உங்கள் புகைப்படங்கள் நிமிடங்களில் உங்கள் ட்வீட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுவிடும். உங்கள் ட்வீட்டர் கணக்கின் பயனர் கணக்கு விபரங்களை குறிப்பாக குறிச்சொல்லை பகிர்ந்து கொள்வதால், ஒரு முறைக்கு / இரு முறை சோதித்த பின்னர் பயன்படுத்தவும்.
நீங்கள், மேலே குறிப்பிட்டவைகளை காட்டிலும் வேறு ஏதேனும் சிறப்பான முறையில் ட்வீட்டரில் படங்களை பகிர்ந்து கொள்கிறீர்களா? எங்களுக்கு சொல்லுங்கள்.
Guest Post By @saandah

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *