12 ட்விட்டரில் காணொளிகளைப் பகிர்ந்திடும் வழிகள்

தங்கள் சம்மந்தப்பட்ட அல்லது பிடித்த காணொளிகளை நண்பர்களுடன் பகிர்வது என்பது புகைப்படங்களை பகிர்வது போன்று அனைவருக்கும் பிடித்தமான விடயம். டுவிட்டரில் வீடியோக்களை பகிரவென அதனுடன் ஒத்தியங்கும் சில தளங்கள் பிரத்தியேகமாக உள்ளன. அவற்றில் சில முக்கியமானவற்றை பார்ப்போம்.

 

வீடியோக்களை பகிர YouTube , MetaCafe போல பல தளங்கள் இருந்தும் எதற்காக இந்த தளங்களை பயன்படுத்த வேண்டும்? நீங்கள் டுவிட்டரில் உங்களது காணொளிகளை பகிர விரும்பும் போது மிகவும் நீண்ட படிமுறைகளை பின்பற்ற வேண்டி இருக்கும்.

 

உதாரணமாக:

YouTube போன்ற தளங்களில் பகிர வேண்டுமென்றால்,
1. முதலில் அதற்கென்று பிரத்தியேக கணக்கொன்றை திறக்க வேண்டும்.
2. வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3. அதன் பின்னரே குறிப்பிட்ட காணொளிக்குரிய சுட்டியை பிரதி செய்து டுவிட்டரில் பகிர வேண்டி இருக்கும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ட்விட்டருடன் ஒத்தியங்கும் கீழே குறிப்பிட்ட சில இணையத்தளங்கள் உதவியாக இருக்கும். இவற்றுக்கு நீங்கள் பிரத்தியேக கணக்குகளை உருவாக்க தேவையில்லை. உங்கள் டுவிட்டர் கணக்கினூடாகவே நுழையலாம்.

 

TwitVid : இத்தளத்தின் மூலம் நீங்கள் இரண்டு வழிகளில் காணொளிகளை பதிவேற்றம் செய்யலாம்.
1. உங்கள் கணினியில் இருந்து நீங்கள் நேரடியாக பதிவேற்றம் செய்யலாம்.
2. நேரடியாக webcam மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம்.
3. iPhone ல் அல்லது black berry யில் இருந்து வீடியோக்களை பதிவேற்றலாம்.
4. நீங்கள் பகிர்ந்த வீடியோக்கள் பற்றிய புள்ளிவிபரங்களை அறிந்துகொள்ளலாம்.
5. தற்போது தளத்தில் பிரபலமாக இருக்கும் வீடியோக்களை பார்க்கலாம்.
6. வீடியோக்களை பதிவேற்றம் செய்ய தளத்தில் உறுப்பினராக பதிய வேண்டியதில்லை.

 

காணொளியை பதிவேற்றம் செய்த பின்னர் அதனை பற்றிய குறுகிய தகவலை வழங்கி TweetVideo பொத்தானை அழுத்தினால் போதுமானது. காணொளியின் URL ஐ சிறியதாக்குவதோ அல்லது அதை பிரதி செய்வது பற்றியோ கவலைப்பட தேவையில்லை. தானாகவே பகிரப்பட்டுவிடும்.

 

Twiddeo : முதலில் குறிப்பிட்ட தளம் போன்றதே இந்த தளமும். உங்கள் கணினியில் இருந்து நேரடியாக காணொளிகளை பதிவேற்றலாம். Webcam லிருந்தும் பகிரலாம். உங்கள் செல்பேசியில் இருந்து வீடியோ கோப்புகளை இணைத்து மின்னஞ்சல் அனுப்பும் வசதி இருந்தால், அவற்றை மின்னஞ்சல் செய்வதன் மூலம் ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.

 

Twitlens : இந்த தளத்தில் இரண்டு நோக்கங்களை ஒரே நேரத்தில் நிறைவேற்றலாம். இதில் புகைப்படங்களை பகிர்வதோடு வீடியோவையும் பகிரலாம். ஒரு காணொளியின் அளவு 50Mb க்கு மிகாமல் ஒரே நேரத்தில் பல காணொளிகளை பகிரலாம். உங்கள் பெயரை குறிப்பிடாமல் உங்கள் அடையாளம் இல்லாமலும் இதில் காணொளிகளை பதிவேற்றலாம். பாதுகாப்பாக உள்நுழைய டுவிட்டெரின் Oauth உடன் ஒத்துழைக்கிறது. உங்கள் காணொளிகள் படங்களில் நண்பர்களை tag செய்து கொள்ளலாம்.

 

Tweettube : யூ டியூப் காணொளிகளை டுவிட்டரில் பகிர்வதற்கு மிகவும் அருமையான தளம். ஒரே நேரத்தில் பல காணொளிகளை பதிவேற்றம் செய்யவும் முடியும். உங்கள் கருத்துகளையும் பதிய முடியும்.

 

Tvider : உங்கள் ட்விட்டர் கணக்கினூடாகவே இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தலாம். 25MB வரை அளவுள்ள ஒலி, ஒளி, படங்களை பதிவேற்றலாம். வெப்காம் லிருந்து நேரடியாக பதிவேற்றி உங்கள் கருத்தை சேர்த்து ட்விட்டரில் பகிரலாம். அலைபேசி மூலமாகவும் பதிவேற்றலாம்.

 

Yfrog : உங்கள் ட்விட்டர் கணக்கினூடாகவே நீங்கள் yfrog அப்ளிகேஷனுக்குள் நுழையலாம் Oauth பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டது. உங்கள் கணினியிலிருந்தோ இணையத்தள முகவரியிலிருந்தோ காணொளிகளை பதிவேற்றலாம். கணணியிலிருந்தோ அல்லது செல்பேசியில் இருந்தோ, இத்தளத்தில் உங்களுக்கென பிரத்தியேகமாக கொடுக்கப்படும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமாக காணொளிகளை பதிவேற்றிக் கொள்ளலாம்.

 

TwitC : படங்கள் காணொளிகள் தரவுகளைப் பதிவேற்றம் செய்து பகிர்ந்து கொள்ள வழி செய்யும் தளம் இது. அது மட்டுமின்றி பல்வேறு பிரபல தளங்களில் இருந்து தரவுகளை நம் பேஸ்புக் ட்விட்டர் இரண்டிலும் சேர்த்து கொள்ளவும் உதவுகிறது.

 

TwitCasting : ஜப்பானிய தளமான இது உங்கள் web cam லிருந்து உங்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்ப உதவும் தளம். பேஸ்புக் ட்விட்டர் வழியாக நம் நண்பர்களும் நேரடி ஒளிபரப்பை பார்க்கும்படி செய்யலாம். TinyChat தளத்திற்கு நிகரானது இது.

 

Zocial.tv : இத்தளம் ட்விட்டர் பேஸ்புக் போன்றவற்றில் அதிகம் பார்க்கப்பட்ட பகிரப்பட்ட காணொளிகளை தொகுத்தளிக்கிறது.

 

Screenr : இத்தளத்தின் மூலமாக உங்கள் கணினி திரையை காணொளியாக படம் பிடிப்பதன் (Screen Cast) மூலம் Tutorial Video களை உருவாக்கி உங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நண்பர்களுடன் பகிர்ந்திட இயலும்.

 

http://vid.ly கணினியில் இருந்து மட்டும் அல்லாது அலைபேசியில் இருந்தும் காணொளிகளை பதிவேற்றிக் கொள்ளலாம்

 

எழுதியவர்  @S_sudharshan

மேற்காணும் வழிகளை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்! ட்வீட் செய்யுங்கள்!

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *