7 சுருக்கு விசைகள்

ShortCuts : சுருக்கு விசைகள் ட்விட்டர் தளத்தின் சுருக்கு விசைகள் வாசிப்பை எளிதாக்குகின்றன.

 

? : கேள்விக் குறியை அழுத்துவதின் மூலம் shortcuts பக்கம் திறக்கும்.

N: ட்விட்டரின் எந்த பக்கத்தில் இருக்கும் போதும் புதிய கீச்சு எழுத N அழுத்தலாம்.

J: காலக்கோட்டில் மேலிருந்து கீழாக அடுத்த கீச்சை வாசிக்க J அழுத்தலாம்.

K: காலக்கோட்டில் கீழிருந்து மேலாக முந்தின கீச்சை வாசிக்க K அழுத்தலாம்.

 

Enter: J,K விசைகளின் மூலம் வாசித்து வருகையில் ஒரு கிச்சின் மீது Enter அழுத்துவதின் மூலம், அதன் Favorites, Retweets, Date, Time விவரங்கள் பார்க்கலாம்.

 

L: இது போல் காலக்கோட்டில் பல்வேறு கீச்சுகளின் விவரங்களை திறந்து வைத்திருக்கிறீர்கள் என்றால் L அழுத்துவதின் மூலம் அனைத்தையும் மூடலாம்.

 

F : ஒரு கீச்சை காலக்கோட்டில் வாசிக்கும் போது, அல்லது தனிபக்கத்தில் திறந்திருக்கும் போது F அழுத்துவதின் மூலம் அதை Favorite செய்ய இயலும்.

 

R: ஒரு கீச்சை காலக்கோட்டில் வாசிக்கும் போது, அல்லது தனிபக்கத்தில் திறந்திருக்கும் போது R அழுத்துவதின் மூலம் அந்த கீச்சிற்கு reply செய்ய இயலும்.

 

T: ஒரு கீச்சை காலக்கோட்டில் வாசிக்கும் போது, அல்லது தனிபக்கத்தில் திறந்திருக்கும் போது T அழுத்துவதின் மூலம் அந்த கீச்சை மீள்கீச்சு செய்ய இயலும்.

 

M: ஒரு பயனரின் பக்கத்தை திறந்திருக்கும் போது M தனை அழுத்துவதன் மூலம் அவருக்கு தனிச் செய்தி அனுப்பும் பெட்டி திறக்கும்.

 

Space Bar : J,K மூலம் ஒவ்வொரு கீச்சாக வாசிப்பதற்கு பதிலாக, Space Bar அழுத்துவதின் மூலம் ஒவ்வொரு பக்கமாக(Page Down) வாசிக்க இயலும்.

 

/ : த்விட்டரின் எந்த பக்கத்தில் இருந்தும் தேடல் பெட்டிக்கு செல்ல / (back slash) அழுத்தி உங்கள் தேடலைத் தட்டச்சலாம்.

 

. : ட்விட்டரானது push முறையில் இயங்குகிறது. காலக்கோட்டில் நீங்கள் வாசித்த கீச்சுகளுக்குப் பின் புதிய கீச்சுகள் வந்திருந்தால் auto refresh ஆகாது. நீங்கள் வாசித்த வரைக்கும் அப்படியே இருக்கும், இத்தனை புதிய கீச்சுகள் வந்துள்ளன என்ற எண்ணிக்கை காட்டப்படும். பின் நீங்கள் அவற்றை வாசிக்கலாம். இதன் மூலம் நீங்கள் காலக்கோட்டில் எந்த ஒரு கீச்சையும் வாசிக்க தவறவிட மாட்டீர்கள். இவ்வாறு சேர்ந்துள்ள புதிய கீச்சுகளை காலக்கோட்டில் காட்ட முற்றுப்புள்ளி(.)யை அழுத்தலாம். Refresh செய்யும் அவசியம் இல்லை.

 

GH : GoTo -> Home ட்விட்டரின் எந்த பக்கத்திலிருந்தும் முகப்பு(Home) பக்க காலக்கோட்டிற்கு செல்ல g,h இரண்டையும் ஒருசேர அழுத்தலாம்.

 

GC : GoTo -> Connect ஒருசேர G,C இரண்டையும் அழுத்துவதின் மூலம் Interactions பகுதிக்கு செல்லலாம். உங்களைப் புதிதாக பின்பற்றியோர், உங்களின் கீச்சுகளை favorite, retweet செய்தது போன்றவற்றைக் காணலாம்.

 

GA : GoTo -> Activity ஒருசேர G,A இரண்டையும் அழுத்துவதின் மூலம் Activity பகுதிக்கு செல்லலாம். உங்கள் நண்பர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள். யார் கீச்சை மீள்கீச்சு, விருப்பத்தேர்வு செய்கிறார்கள் எனக் காணலாம்.

 

GR : GoTo -> Replies ஒருசேர G,R இரண்டையும் அழுத்துவதின் மூலம் உங்களுக்கு அனுப்பப்பட்ட பதில் கீச்சுகளைக் காணலாம்.

 

GD : GoTo -> Discover ஒருசேர G,D இரண்டையும் அழுத்துவதின் மூலம் Discover Stories பகுதிக்கு சென்று தற்போது ட்விட்டரில் அதிகம் அலசப்படும் செய்திகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

 

GP : GoTo -> Profile ஒருசேர G,D இரண்டையும் அழுத்துவதின் மூலம் உங்களின் ட்விட்டர் பக்கத்தைத் திறக்கலாம்.

 

GF : GoTo -> Favorites ஒருசேர G,F இரண்டையும் அழுத்துவதின் மூலம் உங்களின் விருப்பக் கீச்சுகளைக் காணலாம்.

 

GL : GoTo -> Lists ஒரு சேர G,L இரண்டையும் அழுத்தி உங்களின் ட்விட்டர் பட்டியல்களைத் திறக்கலாம்.

 

GM : GoTo -> Messages ஒரு சேர G,M அழுத்துவதின் மூலம் உங்களின் (Direct Messages) தனிச்செய்திகள் பெட்டியைத் திறக்கலாம்.

 

GS : GoTo -> Settings ஒரு சேர G,S இரண்டையும் அழுத்தி ட்விட்டர் கணக்கு அமைப்புகள் பகுதியைத் திறக்கலாம்.

 

GU : GoTo -> User ஒரு சேர G,U இரண்டையும் அழுத்த திறக்கும் பெட்டியில் பயனரின் பெயரைக் கொடுத்து அவரின் ட்விட்டர் பக்கத்தை வாசிக்கலாம்.

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *