6 கீச்சர் பக்கம்

ஒரு கீச்சரின் பக்கத்தை திறவும் போது,

 

அவரின் படம், சுயவிவரம், இடம், இணைய தளம் காட்டும். அவரின் கீச்சுகள், நண்பர்கள், பின்பற்றுவோர் எத்தனை என்பதோடு அவர் உங்களை பின்பற்றுகிறாரா (Follows You) என்பதையும், நீங்கள் அவரைப் பின்பற்றுகிறீர்களா (Following) என்பதையும் காட்டுகிறது. இதே போல் உங்களுடைய பக்கத்தை திறந்தால் Follow/Following பதிலாக Edit Your Profile என இருக்கும்.

 

User Options :

ஒவ்வொரு பயனரின் பக்கத்தை திறவும் போதும், மேற்கண்ட தெரிவுகளை காணலாம்.

 

Tweet to – @பயனர்பெயர் போட்டு பயனருக்கு செய்தி அனுப்ப, பயனர் பெயருடன் சேர்த்து 140 எழுத்துகளில் செய்தி அனுப்பலாம். யாருக்கு வேண்டுமானாலும் இப்படி அனுப்பலாம், வெளிப்படையானவை. இந்த கீச்சுகள் “in reply to” வகை அல்ல. அதாவது நீங்கள் அவரின் குறிப்பிட்ட கீச்சுக்கு பதில் கீச்சாக இதை அனுப்பவில்லை. ட்விட்டரில் மேலும் ஒரு வசதி இருக்கிறது. நீங்கள் ஒருவருக்கு செய்தி அனுப்பும் போது, உங்களைப் பின்பற்றும் எல்லா நண்பர்களும் அந்த செய்தியைக் காண மாட்டார்கள்! உங்களை+அவரை இரண்டை பேரையுமே பின்பற்றுவோர் மட்டுமே காண்பர்.

 

Send a DirectMessage – பயனருக்கு தனிச் செய்திகள் அனுப்ப. கவனிக்க, பயனர் உங்களை பின்பற்றினால் மட்டுமே அவருக்கு நீங்கள் தனிசெய்தி அனுப்ப இயலும். இவை இரண்டு பேர்க்கு இடைப்பட்டவை. பிறர் காண இயலாது. உங்களுக்கு வந்துள்ள தனிச்செய்திகள் எப்போது யாரால் அனுப்பப்பட்டது என்ற விவரம் இருக்கும். செய்தியை சுட்டுவதின் மூலம் உரையாடல் வடிவில் காணலாம்.

 

Add or remove from Lists – பயனர் பெயரை பட்டியலில் சேர்க்க அல்லது நீக்க, பட்டியல் ஏதும் உருவாக்கி இருக்கவில்லையென்றால் New List எனக் காட்டும்.

 

புதிதாக பட்டியலை உருவாக்கி அவரை சேர்த்துக் கொள்ளலாம். Public பட்டியல் அனைவரும் பார்க்கும்படி இருக்கும். யார் வேண்டுமானாலும் Subscribe செய்து கொள்ளலாம். Private பட்டியல் நீங்கள் மட்டுமே பயன்படுத்தும்படி இருக்கும் அதை வேறு யாரும் காண இயலாது.

 

அல்லது நாம் ஏற்கனவே உருவாக்கி இருந்த பட்டியலில் tick செய்வதன் மூலம் இணைத்துக் கொள்ளலாம். சிரமமின்றி ஒரு பயனரின் பக்கத்தில் இருக்கும் SideBar ல் Lists திறந்து அவர் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் பட்டியல் ஒன்றை நாம் பின்பற்றவும் செய்யலாம். ஒரு பட்டியலை தனிப்பக்கத்தில் திறவும் போது அதில் பட்டியலிடப்பட்டுள்ள உறுப்பினர்கள்(List Members) , அந்த பட்டியலை subscribe செய்துள்ளோர்களை தெரிந்து கொள்ளலாம். அதே போல் நீங்கள் உருவாக்கிய ஒரு பட்டியலை தனிப்பக்கத்தில் திறக்கும் போது, மாற்றவும்(Edit) அழிக்கவும்(Delete) தெரிவுகள் இருக்கும்.

 

Block – பயனரை தடை செய்ய, இதன் மூலம் அவரால் உங்களை பின்பற்ற இயலாது. ட்விட்டரில் உள்நுழைந்து இருந்தால் உங்களது கீச்சுகளை பார்க்க இயலாது. உங்களது கீச்சுகளை மீள்கீச்சு செய்ய இயலாது. உங்களது கீச்சுகளுக்கு பதில் தர இயலாது.

 

Report Spam – பயனரை ஸ்பாம் என்று ட்விட்டருக்கு புகார் தெரிவிக்க, இதன் மூலம் பயனர் உங்களைப் பின்பற்றுவதில் இருந்து தடை செய்யப் படுவார். உதாரணமாக நீங்கள் ஆங்கிலத்தில் கீச்சு எழுதும் போது, KeyWord களைக் கொண்டு தேடும் Spam Bot கள் அதற்கு பொய்யான சுட்டிகளை உங்களுக்கு அனுப்பி, உங்கள் கணக்கு விவரங்களை திருடப் பார்க்கும்., அப்போது அந்த கணக்கை Report Spam செய்யலாம். ட்விட்டரின் @safety குழு அந்த கணக்கை சோதித்து Spamஆக இருப்பின் தடை செய்து விடுவர்.

 

Turn Off ReTweets – நீங்கள் பின்பற்றுவோர் எழுதும் கீச்சுகள் மட்டும் அல்லாது அவர் செய்யும் மீள்கீச்சுகளையும் உங்கள் காலக்கோட்டில் காணப்பெறுவீர்கள். யாரேனும் ஒருவர் தேவையற்ற செய்திகளை மீள்கீச்சு செய்து கொண்டே இருந்தால் அதனை இப்படி நிறுத்திக் கொள்ளலாம்.

 

Turn On/Off Mobile Notifications – ட்விட்டரில் உங்களது அலைபேசி எண்ணைக் கொடுத்து Notification Alert கள் வரும்படி செய்து இருந்தால் இதை பயன்படுத்தலாம். ஒரு பயனரின் கீச்சுகளை அலைபேசியில் குறுஞ்செய்தியாக பெறவும், அப்படி பெற்றுக் கொண்டிருக்கும் செய்திகளை நிறுத்தவும் செய்யலாம்.

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *