3 காலக்கோடு:

TimeLine : காலக்கோடு என்பது பகிரப்படும் செய்திகள் உடனுக்குடன் காணும் இடம். கணக்கு உருவாகிய பின் அடுத்த முறை நீங்கள் ட்விட்டர் தளத்தில் உங்களது பயனர் பெயர், கடவு சொல் கொண்டு நுழைகையில் காலக்கோட்டையே முதலில் காண்பீர்கள். குறிப்பிட்ட சிலரின் கீச்சுகளைக் காண ஒவ்வொரு நேரமும் அவர்களின் பக்கத்திற்கு சென்று கொண்டிருக்க இயலாது. அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் நமது காலக்கோட்டிலேயே அந்த கீச்சுகளைப் பெற்றுக் கொள்கிறோம். Public TimeLine ஆனது மொத்த த்விட்டரிலும் பகிரப்படும் செய்திகளின் ஓடை ஆகும். காலக்கோட்டில் கீச்சுகள் பகிரப்பட்ட நேரத்தின் அடிப்படையில் வரிசையாக தெரியும். பக்கத்திற்கு இருபது கீச்சுகள் தெரியும், அதற்கும் முந்தைய கீச்சுகளை காண கீழுள்ள More பொத்தானை அழுத்த வேண்டும்.


Tweet
: ட்விட்டர் நாம் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதை போலத்தான். அலைபேசியில் நமக்கு 160 எழுத்துகள் ஒரு குறுஞ்செய்தி. இங்கே ஒரு கீச்சுக்கு 140 எழுத்துகள் மட்டுமே அனுமதி. இதில் வார்த்தைகளுக்கு இடையேயான இடைவெளியும் சேர்த்தே 140 எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பழக பழக மிக சுருக்கமாக எழுதக் கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் அனுப்பும் கீச்சு உடனடியாக காலக்கோட்டில் பதிவாகிடும். நீங்கள் பகிரும் கீச்சுகளின் மொத்த தொகுப்பும் உங்கள் ட்விட்டர் பக்கத்தில் இருக்கும். அலைபேசியில் Distribution List போலத்தான் இங்கேயும். நீங்கள் அனுப்பும் கீச்சு தனை உங்களை பின்பற்றும் அனைவரும் வாசிக்க இயலும். 140 எழுத்துகளுக்குள் பகிரப்படும் செய்தி என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சிறு செய்தியாகவோ, இணையதளத்திற்கான சுட்டியாகவோ, படமாகவோ, காணொளியாகவோ இருக்கலாம். ஒரு இணைய தளத்தின் முகவரியை பகிருகிறீர்கள் என்றால் கவலை வேண்டாம், ட்விட்டர் தளமே அந்த பெரிய இணைப்புக்கு t.co/—- என்கிற சுருக்கிய முகவரியை தந்து விடும். அல்லது bit.ly என்ற இணைய தளத்திற்கு சென்று நீங்களே சுருக்கி, பின் பகிர்ந்து கொள்ளலாம். பக்கத்தின் இடது புறம் இருக்கும் கீச்சினை எழுதும் பெட்டியின் கீழ் எத்தனை எழுத்துகள் பயன்படுத்தி உள்ளீர்கள் எனக் காட்டும். கீச்சுகள் எழுத தளத்தின் மேலே வலது மூலையிலும் ஊதா நிறத்தில் இறகு சின்னம் இருக்கும். பெட்டியில் எழுத துவங்கும் போது Add an Image – புகைப்படத்தை பதிவேற்றுவதற்கான வசதியும், Add Your Location – கீச்சுகளுடன் உங்களின் தற்போதைய GeoLocation னும் சேர்த்திடும் வசதியும் காட்டப்படும்.

காலக்கோட்டில் ஒரு கிச்சின் மீது அல்லது நீங்கள் எழுதிய கீச்சில் Cursor ஐ கொண்டு செல்லும் போது மேற்கண்ட தேர்வுகளைக் காட்டும்.

 

  1. Reply – கீச்சுக்கு நீங்கள் பதில் அளிக்க விரும்பினால் இதை சொடுக்கவும். @twitamils என்று பயனர் பெயர் வரும் பின் அதில் உங்கள் செய்தியை சேர்த்து Tweet பொத்தானை அழுத்தவும்.

 

கவனிக்க, காலக்கோட்டில் காணும் கீச்சு உங்களுடையதாக இருந்தால் அதில் ReTweet க்கு பதிலாக Delete வசதி இருக்கும். உங்களுடைய கீச்சை நீங்களே ReTweet செய்ய இயலாது. ஆனால் உங்களது கீச்சை நீங்கள் அழிக்க இயலும். இந்த கீச்சு TwiTamils ன் கீச்சுக்கு பதிலாக எழுதப்பட்டுள்ளதால் கிச்சின் கீழே “in reply to தமிழ் கீச்சர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் உங்களுக்கு வரும் கீச்சுகளில் in reply to என்பதை சுட்டுவதன் மூலம், உங்களின் எந்த கீச்சிற்கு பதில் கீச்சாக அது அனுப்பபட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 

  1. ReTweet – மீள்கீச்சு மூலம் ஒருவரின் கீச்சை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இயலும். உங்களது ட்விட்டர் பக்கத்தில் அந்த கீச்சு அப்படியே வெட்டி ஒட்டியது போல் Embed செய்யப்பட்டிருக்கும். இதை ட்விட்டர் புதிதாக அறிமுகப்படுத்தியது. முன்பு மீள்கீச்சு செய்யும் போது மாற்றம் செய்து ட்வீட் செய்யும்படி இருந்தது. “RT @user : Message’ என்ற வடிவில் இருக்கும். இன்றும் பலர் அந்த முறையில் மீள் கீச்சு செய்கிறார்கள். நல்ல கீச்சு இதன் மூலம் பலமுறை சுற்றி வரும்.
  1. Favorite – நட்சத்திரக் குறியை சுட்டுவதன் மூலம் இந்த கீச்சு உங்கள் விருப்பத் தேர்வுகளில் சேர்ந்து விடும். பிடித்தமான கீச்சுகளை இது போல் Favorite செய்து கொள்ளலாம்.
  1. Open – இதை சொடுக்குவதின் மூலம் இந்த கீச்சை தனியாக ஒரு பக்கத்தில் திறந்து கொள்ளலாம். உதாரணமாக, இங்கே ஒரு கீச்சை திறந்துள்ளோம்.

 

இந்த கீச்சை கவனியுங்கள். மேலே அதன் இணைப்பை சேர்த்துள்ளோம். ஒவ்வொரு கீச்சிற்கும் ட்விட்டர் ஒரு status எண்ணை வழங்குகிறது. இந்த கீச்சு 50+ மேல் Retweets, 13 Favorites பெற்றுள்ளது. அவற்றை சொடுக்குவதன் மூலம் யாரெல்லாம் இந்த கீச்சை ReTweets, Favorites செய்துள்ளார்கள் எனப் பார்க்கலாம். (காலக்கோட்டில் கிச்சின் கீழே ‘Expand’ என்பதை சுட்டுவதின் மூலம் கீச்சை தனிப்பக்கத்தில் திறவாமலும் இதை தெரிந்து கொள்ள இயலும். அலைபேசிக்கான ட்விட்டரில் View Details என்றிருக்கும்) 3.45pm – 3 Nov 11 என்பதை TimeStamp என்கிறோம். கீச்சு அனுப்பப்பட்ட தேதி நேரத்தைக் குறிக்கும். via Web என்பது twitter.com லிருந்து அனுப்பபட்டதைக் குறிக்கிறது. Embed This Tweet இதை சுட்டுவதன் மூலம் கீச்சை நீங்கள் உங்கள் வலைப்பூவில் பதிவதர்கான HTML code கிடைக்கும். அதை copy paste செய்து கொள்ளலாம். Reply , ReTweet, Favorite செய்வதற்கான தேர்வுகளும் தரப்பட்டுள்ளன.

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *