14 உங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்?

ட்விட்டர் சில Rules & Regulations களை வைத்துள்ளது. அவற்றை மீறும் போது நம் ட்விட்டர் கணக்கு Suspend செய்யப்படலாம். பின்னர் ட்விட்டர் தேடுதலில் கூட உங்கள் பக்கம் கண்ணுக்கு தெரியாது. சரி, எதனால் இவ்வாறு suspend ஆகிறது, suspended ஆனா ட்விட்டர் கணக்கை எவ்வாறு மீட்கலாம் என்பது பற்றிக் காண்போம்.

 

1. தொடர்ந்து ஒரே link ஐ ஒரு சிறிய காலத்திற்குள் பலருக்கு ட்வீட் செய்தால் உங்களை ட்விட்டர் Spam ஆக கருதி விடும், இதனால் Suspension நடக்க வாய்ப்புள்ளது. நீங்கள் புதிதாக தளம் ஆரம்பித்துள்ளதை அல்லது ஒரு நல்ல காரியத்திற்காக ஓட்டு போட சொல்லி நான்கு ட்வீட் களில் உங்கள் நண்பர்களுக்கு link உடன் @ mention செய்கிறீர்களா? நீங்கள் Suspend ஆகலாம்.

 

2. Bulk Follow/Unfollow செய்வதாலும் கணக்கு suspend செய்யப்படலாம். ஒரு மணி நேரத்திற்கு நூறு பேரை & ஒரு நாளைக்கு ஆயிரம் பேரை பின்பற்றலாம் என்ற API கணக்கு உள்ளது, Unfollow எத்தனை செய்யலாம் என கணக்கு தெரியவில்லை. உங்களைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை 2000 தாண்டினால் தவிர உங்களால் 2000க்கு மேற்பட்டோரை பின்பற்ற இயலாது. சில ட்விட்டர் tool களைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் உங்களைப் பின்பற்றுவோர் அனைவரையும் FollowBack செய்யலாம், அல்லது உங்களை பின்பற்றாதோரை மொத்தமாக Unfollow செய்கலாம். இந்த மாதிரியான செய்கைகள் நாம் Suspend ஆக வழிவகுக்கும்.

 

3. Automation செய்வது Suspend ஆக வழிவகுக்கலாம், உதாரணமாக நீங்கள் உங்கள் ட்விட்டர் கணக்கை உங்கள் தளத்தின் RSS feed, Youtube Channel, Picasa Album உடன் இணைத்திருந்து அதில் நீங்கள் ஒவ்வொரு முறை பதிவேற்றும் போதும் AutoTweet ஆகும் படி செய்தல். உறுதியாக கூற முடியா விட்டாலும் அதிகப்படியான Automation பாதிப்புக்குள்ளாக்கும்.

 

4. இரண்டாவது Automation வகையில் ஒரு Trending Topic ஐ நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள , அல்லது ஒரு Topic ஐ Trend ஆக்க முயற்சித்து தொடர்ந்து ஒரே மாதிரியாக த்வீட்டுவது RT செய்வது. அல்லது பல்வேறு கணக்குகளில் ஒரே ட்வீட் ஐ அனுப்புவது போன்றவற்றை செய்தால் நாம் அந்த Trending Topic இன் தேடுதலில் த்விட்டரால் விலக்கி வைக்கப் பட்டு விடுவோம், நம் கணக்குகளும் Suspend ஆகலாம். ஒரே விதமான பெயர்களில் தொடர் கணக்குகளை துவங்கி இதை செய்தாலும், அனைத்து கணக்குகளும் Suspend ஆகி விடும்.

 

5. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பிரபலத்தின் பெயரில் ட்விட்டர் கணக்கு துவங்கி பின் அவர்கள் அதை நிருபித்து ட்விட்டருக்கு புகார் செய்தாலும் TradeMark MisUse அடிப்படையில் அந்த பக்கம் Suspend செய்யப்படலாம். தமிழ் சினிமா பிரபலங்களின் பெயரில் சிலர் மலிவு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். அவர்களின் த்வீட்களிலேயே பொய்யர்கள் என்பது புலனாகி விடும்.

 

6. சில நேர நீங்கள் Spam ஆக கருதப்பட கூடும். மேற்கூறப்பட்ட செய்கைகளுடன், கீழ் வருவனவும்..
ஆபாச படங்கள் அனுப்பினால்,
அதிகம் பேர் உங்களை Block செய்தால்,
அதிகம் பேர் உங்களை Report Spam செய்தால்,
கவனம் கவர Follow/Unfollow மாறி மாறி செய்தால்,
தீங்கு விளைவிக்கும் தளங்களுக்கு url த்வீட்டினால்,
த்வீட்களில் தொடர்ந்து link களாக மட்டுமே இருந்தால்,
உங்களை பின்பற்றாதோரை அதிகம் mention செய்தால்,
அடுத்தவர் ட்வீட்களை தொடர்ந்து Copy/Paste செய்தால்,
Direct Message மூலமாக Spam செய்தால்

 

7. Get More Followers போன்ற scam களில் மாட்டிக் கொள்ளாதீர்கள். இது போன்ற தளங்களை பரிந்துரைத்தால் உங்கள் கணக்கு Suspend ஆகலாம். ட்விட்டர் ஒரு பந்தயம் அல்ல. அதிக எண்ணிக்கையில் follower வைத்திருந்து அதில் பெரும்பாலும் Bot களாக இருந்து என்ன பலன். நீங்கள் ட்விட்டரில் இருந்து எவ்வளவு பெறுகிறீர்கள், ட்விட்டரில் எவ்வளவு விசயம் வழங்குகிறீர்கள், எவ்வாறு பழகுகிறீர்கள் என்பது தான் முக்கியமே அன்றி, எண்ணிக்கையல்ல. ட்விட்டர் தளத்தில் தவிர வேறு எங்கும் உங்களின் ட்விட்டர் UserName, PassWord கொடுக்காதீர்கள். குறிப்பாக SignIn with Twitter என்கிற Oauth இல்லாத தளத்தில்.

 

மேற்காணும் தவறுகளை செய்யாது இருந்தாலே போதும் ட்விட்டரில் எந்த தொல்லையும் இருக்காது. சரி, நம் கணக்கு Suspend ஆகி விட்டதனில் எப்படி மீட்பதென பாப்போம்.

 

ட்விட்டர் சேவை பக்கத்தில் இருக்கும் விண்ணப்பத்தில் உங்கள் தகவல் மற்றும் கோரிக்கைகளை கொடுத்து Submit செய்யவும். சிறிது நேரத்தில் ஒரு Confirmation Mail உங்கள் email id க்கு அனுப்பப் படும் அதில் ticket number வழங்கப்பட்டிருக்கும். பின்னாளில் உங்கள் கோரிக்கையின் Status Of Review தெரிந்து கொள்ள இந்த எண் உதவும். தகவல் மின்னஞ்சல் பெறவில்லை எனில் உங்கள் மின்னஞ்சலில் இருந்து மேற்கண்ட Formல் கொடுத்தது போல ஒரு கோரிக்கை suspended@twitter.com க்கு அனுப்பி விடவும். ட்விட்டரில் வேறு நண்பர் ஒருவரை உங்களுக்காக @ginja @ginger @delbius ஆகியோரிடம் பரிந்துரைக்க சொல்லலாம். Twitter Spam Control ல் இருக்கும் இவர்களுக்கு பணிவுடன் ஆங்கிலத்தில் கோரிக்கை வைக்கலாம் @நீங்கள் Spam இல்லையென.

 

ஒரு தடவை அனுப்பினால் போதும், பல முறை அனுப்பினால் உடனே நடந்து விடும் என நினைக்க வேண்டாம். அனுப்பிய பின் பொறுமையாக காத்திருங்கள். முடிவெடுப்பது அவர்களிடம்.

 

அதிகபட்சம் பதினைந்து நாள்களுக்குள் கணக்கை மீட்டு விடலாம்.

 

பதிவு @karaiyaan

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *