8 அலைபேசியில் ட்விட்டர்

ட்விட்டர் கணக்கை துவங்கவோ, பயன்படுத்தவோ கணினி கண்டிப்பாக வேண்டும் என்பதில்லை. இணைய இணைப்புள்ள அலைபேசி இருந்தாலும் போதும். அதில் mobile.twitter.com திறந்து கொள்ளுங்கள்.

 

SignUp : https://mobile.twitter.com/signup ஏற்கனவே ட்விட்டரில் கணக்கு உருவாக்கி இருந்தால் SignIn அழுத்தி பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்து உள்நுழைக. அல்லது புதிதாக கணக்கு துவங்க,

 

உங்களின் பெயர்(Full Name), மின்னஞ்சல் முகவரி(Email), கடவுச் சொல்(Password) கொடுங்கள். பின் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எழுத்துகளை(captcha verification) சரியாக தட்டச்சி SignUp for Twitter பொத்தானை அழுத்துக.

 

பின் உங்களின் ட்விட்டர் @பயனர் பெயரைத் தட்டச்சி தொடர்க(Continue)! ட்விட்டரின் வரவேற்பு செய்தி இருக்கும். புதிய பயனர்கள் யாரையேனும் பின்பற்றி இருக்காவிடில் காலக்கோடானது வெறுமையாகவே இருக்கும்.

 

Home : வீடு படம் காலக்கோட்டைக் காட்டும். காலக்கோட்டில் முந்தைய கீச்சுகளைக் காண கீழே இருக்கும் Load Older Tweets அழுத்துக!

 

@ : https://mobile.twitter.com/mentions உங்களுக்கு அனுப்பப்பட்ட பதில் கீச்சுகளை இங்கே காணலாம்.

# : https://mobile.twitter.com/i/discover இந்த பகுதியில் தற்போது ட்விட்டரில் அதிகம் கதைக்கப்படும் செய்திகள் (Trends), துறைசார் அடிப்படையில் பிரபலங்களின் பட்டியலும்(Browse Categories) இருக்கும்.

 

Account : https://mobile.twitter.com/account மனித உருவம் – உங்களின் ட்விட்டர் (User Profile) பக்கத்தை திறக்கும். அலைபேசிக்கான ட்விட்டர் இடைமுகப்பில் SideBar வசதி இல்லை. உங்களுடைய ட்விட்டர் பக்கத்தை திறப்பதின் மூலமே உங்களின் கீச்சுகள், விருப்ப கீச்சுகள், தனிச்செய்திகளைப் பார்க்க முடியும்.

 

Compose Tweet : https://mobile.twitter.com/compose/tweet இறகானது புதிய கீச்சு எழுதுவதைக் குறிக்கிறது. கீச்சுடன் படங்களை இணைக்கும் வசதி வழங்கப்படவில்லை.

 

Search : மேலிருக்கும் லென்ஸ் தனை சொடுக்கி அல்லது கீழே இருக்கும் தேடல் பெட்டியில், தேட விரும்பும் சொல்லை-பட்டியை தரலாம்.

 

Refresh : அலைபேசிக்கான த்விட்டரும் AutoRefresh ஆவதில்லை. லென்சிற்கு அடுத்து இருக்கும் அம்புக் குறியை சொடுக்கி பக்கத்தை Reload செய்யலாம்.

 

Back To Top : Load Older Tweets அழுத்தி கீழே கீழே அதிக கீச்சுகளை வாசிக்கும் போது, பக்கத்தின் மேலே செல்வதற்கு இதை அழுத்தலாம்.

 

Turn Images Off : அலைபேசிக்கான உலாவிகளில்(Browser) இணைய பக்கங்களில் படங்கள் ஏதும் தோன்றாமல் மறைக்கும் வசதி இருக்கும். இதன் மூலம் பக்கமானது தரவிறக்கமாதல் வேகமாக இருக்கும். ட்விட்டர் தளத்தில் மட்டும் படங்கள் தெரிய வேண்டாம் என்றால் உலாவியின் அமைப்பில் மாற்றம் செய்ய தேவை இல்லை. ட்விட்டரின் கீழே இருக்கும் Turn Off Images அழுத்தினாலே போதுமானது.

 

அலைபேசிக்கான அமைப்புகள் : அலைபேசிக்கான ட்விட்டரில் அமைப்புகள் https://mobile.twitter.com/settings பகுதி எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது.

 

Account Settings : https://mobile.twitter.com/account/settings Account & Privacy settings களை இங்கே மாற்றிக் கொள்ளலாம். பெயர் (Name) மாற்றலாம். கீச்சுகளில் GeoLocation பகிர்வதை சேர்க்க/நீக்க செய்யலாம். உங்களது ட்விட்டர் கணக்கை Private/Protected ஆக மாற்ற/நீக்க செய்து கொள்ளலாம். இறுதியாக நீங்கள் செய்யும் மாற்றங்களை உங்களின் கடவுச்சொல் கொடுத்து உறுதிபடுத்த வேண்டும்.

 

Change User Name :

 

உங்கள் தற்போதைய பயனர் பெயரை மாற்ற விரும்பினால், பெட்டியில் உள்ளதை அழித்து விட்டு, புதிய பயனர் பெயரைக் கொடுத்து, உறுதிபடுத்த கடவுச்சொல்லை தட்டச்சி Save தனை சொடுக்குங்கள்.

 

Change Email :

 

ட்விட்டர் கணக்கு துவங்க வழங்கிய மின்னஞ்சலை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். https://mobile.twitter.com/settings/mail புதிய மின்னஞ்சலைக் கொடுத்த பின், கடவுச் சொல்லை (Enter Password to save changes) கொடுத்து உறுதிபடுத்தி Save பொத்தானை அழுத்துக!

 

Change Password : https://mobile.twitter.com/settings/password உங்களுடைய கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற, தற்போதைய கடவுச்சொல்லைக் (current password) கொடுத்து, அடுத்த கட்டத்தில் புதிய கடவுச்சொல்லைக் (new password) கொடுத்து, புதிய கடவுச்சொல்லை மறுபடியும் கொடுத்து (verify password) ஊதி செய்து Save பொத்தானை அழுத்துக.

 

Remove Contacts : https://mobile.twitter.com/settings/wipe_addressbook ட்விட்டர் தளத்தில் Find Friends பகுதியில் நமது மின்னஞ்சல் விவரங்களைக் கொடுத்து, நமது நண்பர்கள் யாரும் ட்விட்டரில் உளரா? என தேடுவது பற்றி பார்த்தோம் இல்லையா, அப்படி த்விட்டருடன் நாம் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல் விவரங்களை அழித்திட மேற்குறிப்பிட்ட இணைப்பில் சென்று Remove பொத்தானை அழுத்த வேண்டும்.

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *